சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம்

சென்னை,மே25- போக்குவரத்து விதிகளை மீறிய வர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில்  10 இடங்களில் அழைப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்த சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.

இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த 20ஆம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராத தொகையாக ரூ.60,36,000 வசூலிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் அழைப்பு மய்யங்கள் மூலம் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.12,99,08,600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment