சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
காலியிடம் : சென்ட்ரல் ஹெல்த் சர்வீசில் மெடிக்கல் ஆபிசர் 584, ரயில்வேயில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபிசர் 300, டில்லி முனிசிபல் கவுன்சிலில் மெடிக்கல் ஆபிசர் 376 உட்பட மொத்தம் 1261 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 2023 ஆக. 1 அடிப்படையில் சென்ட்ரல் ஹெல்த் சர்வீசில் மெடிக்கல் ஆபிசர் பணிக்கு 35, மற்ற பணிகளுக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 9.5.2023
விவரங்களுக்கு : upsc.gov.in
No comments:
Post a Comment