11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை முகாம்

 அரியலூர், மே 2 அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11, 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2- ஆம் கட்டமாக ஜெயங் கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய வட்டாரங் களுக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை முகாம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஜெயங் கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி வளா கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவி களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment