ஜெனீவா, மே 14- உலகளவில் மகப்பேற்றின்போது, உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அய்.நா.வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக் கப்பட்டு வரும் சுகாதார நடவடிக் கைகளால் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
அய்.நா.வின் உறுப்பு அமைப்பு களான உலக சுகாதார மய்யம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தயாரான இந்த அறிக்கை, தென் னாப்பிரிக்கா மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘பன்னாட்டு மகப்பேறு சுகாதார மாநாட்டில்’ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
கடந்த 2020_-2021-ஆம் ஆண்டு உலகளவில் 45 லட்சம் மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் பிரசவத்தின்போது உயிரிழந்த 2.9 லட்சம் தாய்மார்கள், 19 லட்சம் பச்சிளம் குழந்தைகள், பிறந்த சில நாள்களில் உயிரிழந்த 23 லட்சம் குழந்தைகள் அடங்குவர்.
இந்தியாவில் மட்டும் 7.8 லட்சம் மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதே ஆண்டில், உலக குழந்தைகள் பிறப்பில் 17 சதவீதம் இந்தியாவில் பதிவாகி யுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, வங்க தேசம், சீனா ஆகிய நாடுகள் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2000 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளைவிட 2010-ஆம் ஆண்டு முதல் மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் மந்த நிலை நிலவுகிறது.
இதற்கான காரணங்களைக் கண்டறிவது சவாலாக உள்ளது. அதேவேளையில், கரோனாவுக்குப் பிறகு மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் வரும் 10 ஆண்டுகளில் அதன் வேகம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, மகப்பேறு சுகாதாரத்தில் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய கண்டத்தில் வாழும் 60 சதவீத பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டி உலக சுகாதார மய்யம் பரிந்துரைத்துள்ள 8 பரிசோத னைகளில் 4 பரிசோதனைகள் கூட முறையாக நடத்தப்படுவ தில்லை.
மலிவு விலையில் சுகாதாரம் - அரசு உறுதி செய்க!
மகப்பேறு உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு பிரசவத்துக்கு முன் பும் பின்பும் மற்றும் பிரசவத்தின் போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரம் கிடைப்பதை அரசுகள் உறுதிப் படுத்த வேண்டும்.
அத்தியாவசிய மருந்துகள், பாதுகாப்பான நீர், நம்பகமான மின்சாரம் ஆகியவற்றுடன் திற மையான மற்றும் ஊக்கமளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மகப் பேறு பணிகளில் ஈடுபடுத்தப் படுவது அவசியம்.
உயிர் காக்கும் சேவையைப் பெற வாய்ப்பில்லாத ஏழைப் பெண்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைகளில் உள்ள பெண்களைக் குறிவைத்து மகப் பேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.
தீங்கிழைக்கும் பாலின விதிமுறைகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவது மகப்பேறு ஆரோக்கியத்தை மேம்படுத்து வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளால் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக யூனிசெஃப் மகப்பேறு சுகாதார பிரிவின் மூத்த ஆலோசகரான மருத்துவர் ககன் குப்தா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தென் அமெரிக்க நாடுகளில் இந்த விகிதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியா வில் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் 20 சதவீதமும், வங்க தேசத்தில் 42 சதவீதமும் குறைந் திருப்பதாக ககன் குப்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment