தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மே 12 தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் துக்கான (100 நாள் வேலை) குறைதீர்ப்பாளர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி சட்டம் பிரிவு 27-இன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப் படுகின்றனர்.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத் துக்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி என, 37 குறை தீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப் படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள் ளிட்ட திட்டம் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள், அலுவலகத்தில் அல்லதுகளஆய்வின்போது குறைதீர்ப் பாளரிடம் பதிவு செய்யப்படலாம்.
விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறை தீர்ப்பாள ரால் புகார் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப் படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட் களுக்குள் முடிக்கப் படுகிறது.
குறைதீர்ப்பாளரால் குறைகள் கையாளப் பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்து வதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக் கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலை தளத்தில் வெளியிடப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப் பின் குறைதீர்ப்பாளர்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கோடி கடன்
ஸ்டேட் வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
சென்னை, மே 12 தமிழ்நாடு அரசு நேற்று (11.5.2023) வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் வழிகாட்டுதலில், மாநிலத்தின் அனைத் துப் பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்புக்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எட்டவும், சுயஉதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்திய ஸ்டேட் வங்கி இடையே 10.5.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினியும், சென்னை வட்ட இந்திய ஸ்டேட் வங்கி யின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட் டனர்.
No comments:
Post a Comment