இலங்கைக் கடற்படை மேனாள் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

இலங்கைக் கடற்படை மேனாள் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு

கொழும்பு, ஏப். 29- போர்க்குற்றச்சாட்டு களால் இலங்கை யின் மேனாள் கடற் படை தளபதியான வசந்த கரன்னகொட அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

இலங்கையில்  விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டில்  முடிவுக்கு வந்தது. அப் போது இலங்கை கடற்படை தளபதியாக இருந்த வர் அட்மிரல் வசந்த கரன்னகொட. அப்போதே இவர் மீது பல்வேறு போர்க் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

அதில் 11 மாணவர்களை கடத்தி அவர்களது பெற்றோரிடம் பணம் பெற்றது; பின்னர் 11 மாணவர்களையும் காணாமல் ஆக்கச் செய்தது ஆகியவை மிக முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். 

இது தொடர்பான வழக்கிலிருந்து 2021 ஆம் ஆண்டு வசந்தர கொரன்ன கடா விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தாலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பன் னாட்டு மனித உரிமை விசாரணை அமைப்புகளிடம் ஆதாரங்களுடன் புகார்களை அளித்திருந்தன. இந்த நிலையில் வசந்த கரன்னகொட, இலங்கை வடமேற்கு மாகாண ஆளு நராக நியமிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வுக்கு மனைவியுடன் செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார் . அவ ரது விசா விண்ணப்பத்தை அமெரிக்கா அரசு நிராகரித்துவிட்டது. வசந்தர கரன்னகொட, அவரது மனைவி அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் அளித்த  ஆவணங் களின் அடிப்படையில் அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment