சென்னை, ஏப். 21- "திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன" என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நேற்று (20.4.2023) காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது சட் டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப் பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "போதைப்பொருட் களின் பிடியில் இந்த ஆட்சியை விட்டுச்சென்றதே உங்களது ஆட்சியில்தான். இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க பல தீவிர நடவடிக்கைகளை நாங் கள் எடுத்திருக்கிறோம். கடந்த 2020 அதிமுக ஆட்சியில், கோபா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 40,246. ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை பதிவான வழக்குகள் 63,656. அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37,846, திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,480. அதிமுக ஆட்சியில் 2020இல் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள் ளிட்ட போதைப்பொருட்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் கிலோ. ஆனால் திமுக ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 3 லட்சத்து 37,295 கிலோ. 2016 அதிமுக ஆட்சியை எடுத்துக்கொண்டால், 2020 ழிஞிறிஷி சட்டத்தின் கீழ் தொட ரப்பட்ட வழக்குகள் 5,403. ஆனால் திமுக ஆட்சியில் 2022ல் மட்டும் 10 ஆயிரத்து 391 வழக்குகள் இரட்டிப்பாக வழக்குகள் பதிவு செய்து போதைப்பொருட்கள் ஒழிப் பில் தீவிரம் காட்டப்பட்டுள் ளது.
2022இல் தான், கடந்த 6 ஆண்டுகளில் அதிக எண்ணிக் கையில் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. அதுவும் திமுக ஆட்சியில்தான். அதேபோல் இந்த சட்டத்தின்கீழ் 2020 அதி முக ஆட்சியில் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும், 1 கிலோ 896 கிராம் கெராயினும், 527 வாகனங்கள் மட்டுமே பறி முதல் செய்யப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சியில் 2022இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போதைப்பொருட் களை விற்பனை செய்பவர்கள், விநியோகிப்பவர்களின் 5723 வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.இந்த விவகாரத் தில் காவல் துறையினர் கடு மையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ் வொரு மாவட்டத்தில் நான் மேற்கொள்ளும் கள ஆய் வின் போதும் இந்த நடவடிக்கை களை நான் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன். காவல் துறையினர் நேர்மையாக நட வடிக்கை எடுத்து வருகின்ற நேரத்தில் ஒரு சில கருப்பு ஆடுகள் காவல் துறையில் இருப்பதையும் காவல்துறை அதிகாரிகள் களையெடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் இல்லாத மாநி லமாக தமிழ்நாட்டை மாற்றிட இரவுபகல் பாராமல் காவல் துறையினர் பணியாற்றி வரு வது இந்த ஆட்சியில்தான்.
இதைவிட வெட்கக்கேடு என்னவென்றால், அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர், காவல் துறை தலைமை இயக்குநர், ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள் மீது எல்லாம் சிபிஅய் நட வடிக்கை எடுக்கும் அளவுக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. எனவே எதிர்க் கட்சித் தலைவர் அதை மறந்து விட்டு பேசக்கூடாது.
சமீபத்தில் கூட மேனாள் காவல்துறை தலைவர், ஆணை யர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஊட கங்களிலும் இந்த செய்தி வந் திருக்கிறது. அதிமுக ஆட்சியில் தான் போதைப்பொருட்களின் மாநிலமாக தமிழ்நாட்டை விட்டுச் சென்றீர்கள். நிதி நெருக் கடியை சீரமைப்பது போல, இந்த நிர்வாகச் சீர் கேட்டையும் சரிசெய்வது எங்களது கடமை யாக வந்துள்ளது. போதைப் பொருட்களை நிச்சயமாக அடியோடு ஒழிப்போம். இளை ஞர்களின் எதிர் காலத்தைக் காப்போம்" இவ்வாறு முதல மைச்சர் பதிலளித்தார்.
No comments:
Post a Comment