ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்வரும் அமுத மொழிகளை உதிர்த்துள்ளார்.
‘‘முனிவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்கவேண்டும். நாம் நேர்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய சக்தி, மற்றவர்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கோ, வலி ஏற்படுத்துவதற்கோ இருக்காது. அதற்கு மாறாக, அமைதியை உருவாக்கவும், பலவீனம் வாய்ந்தவர்களைப் பாதுகாப்பதற்காகவும் இருக்கும்'' என்று அருளி உள்ளார் மோகன் பாகவத்.
அது சரி!
யார் அந்த முனிவர்கள்?
மானுக்குப் பிறந்த கலைக்கோட்டு ரிஷி, நரிக்குப் பிறந்த ஜம்புகர், குடத்திற்குப் பிறந்த அகஸ்தியர், தவளைக்குப் பிறந்த மாண்டவியர், கழுதைக்குப் பிறந்த காங்கேயர், நாய்க்குப் பிறந்த சகுனகர், கோட்டானுக்குப் பிறந்த கணாதர், கரடிக்குப் பிறந்த ஜாம்பு வந்தர், குதிரைக்குப் பிறந்த அஸ்வத்தாமன் - இத்தகைய ரிஷிகளை நாம் பின்பற்ற வேண்டுமா?
மோகன் பாகவத் பதில் சொல்வாரா?
திருப்பிக் கேட்கலாமா!
கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்த ஆதிரா அவர் களுக்குச் சலுகை வழங்கிய தீர்மானம் - தரவுகளை பொது வெளியில் வெளியிடத் தயாரா?
- பி.ஜே.பி. அண்ணாமலை கேள்வி
நாமும் திருப்பிக் கேட்கலாமே, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான தரவுகளை அளிக்கத் தயாரா, ஒன்றிய அரசு?
No comments:
Post a Comment