(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
காகபட்டர்களின் தலைமையிடம் நாக்பூர்!
புதிய தொழில்நுட்பம் சமூகத்தை பாய்ச்சல் வேகத் தில் உந்தித் தள்ளுகிறது. அதற்கு இணையாகப் பழை மைவாதம் பின்னுக்கு இழுக்கிறது அல்லது தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது. இந்திய சமூகத்தில் சனாதனம் எனும் பார்ப்பனீயம் டி-20 மேட்ச் ஆடும் தோனியைப் போன்று நின்று அடித்து ஆடுகிறது. கட்டுக்கதைகள், சாஸ்திரங்கள் என்ற பெயரில் சிக்சர் அடித்துக் கொண்டு இருக்கிறது. மநு விஸ்வரூபமாய் அனைத்து இடங்களிலும் அடர்த்தி யாக நிற்கிறது. போர்த் திறத்தால், வாளின் வலிமையால் பலபகுதிகளை வென்றவன் சத்ரபதி சிவாஜி. மக்கள் செல்வாக்கு மிக்கவனாக இருந்தாலும், மராத்திய பேரர சின் அரசனாக மூடிசூட்டிக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனீயம் சதி செய்கிறது. தோளில் கைபோட்டு அல்லையில் சொருகுகிறது. சாஸ்திரம் என்ற பெயரில் பார்ப்பனீயம் நடத்தும் கயமைத்தனத்தை “சந்திர மோகன் அல்லது சிவாஜிகண்ட இந்து ராஜ்யம்” எனும் நாடகமாக வடித்தார் பேரறிஞர் அண்ணா. 1945ஆம் ஆண்டு அரங்கேற்றிய அந்த நாடகத்தின் பொருத்தப் பாடு இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. அந்த நாடகத்திற்கு சென்னை அக்னி கலைக்குழு உயிர் கொடுத்துள்ளது. “சிவாஜிகண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் அண்மையில் சென்னை நாரதகான சபாவில் இந்நாடகம் அரங்கேறியது.
சத்ரபதி சிவாஜியின் வரலாற்றில், அரசனாக பதவி யேற்கும் சமயத்தில் நிகழும் சனாதனிகளின் சதித் திட்டத்தை மய்யப்படுத்தி நாடகம் அமைந்துள்ளது. நாடகத்தில் உள்ள வசனங்கள், பொருத்தப்பாடுகள் இன்றைய அரசியலை உள்வாங்கிக் கொள்ளச் செய்கிறது. காகபட்டர் கதாபாத்திரத்தின் வஞ்சம் மிகுந்த உடல் மொழியும், “காடு மேடெல்லாம் போரிட்டு வென்றாலும், நம் காலில் விழுந்தால்தான் அரச பதவி. 4வகை சேனைகள் இருந்தாலும், 4 சாஸ்திரங்களால் அவற்றை வீழ்த்துவோம். சாத்திரங்கள் எனும் சூட்சமம் உள்ளவரை... அவர்கள் வேல் எறிகிறார்கள். நாம் புல்லை எறிகிறோம். புல் ஆசி இல்லாமல் எதுவும் நடக்காது. சாத்திரங்களை கேள்வி கேட்கக் கூடாது. நமது நலனுக்கு தேவையென்றால் கதை கட்டி விடுவோம்” என்பன போன்ற சொல்லாடல்களும் பார்வையாளர்களிடம் சனாதனச் சதிகளை அம்பலப் படுத்துகின்றன. நயமான வார்த்தைகளுக்கு மயங்கி ஏமாந்து கொண்டே இருக்கிறோமே என வேதனை கொள்ளவும் செய்கிறது. “அண்ணா தானே எழுதி, இயக்கி, நடித்த இந்த நாடகத்தில், காகபட்டராக நடிப்பது எளிது. ஏனெனில் அது அவரது வசனம். அந்த வசனங்களை உள்வாங்கி நடித்த காகபட்டருக்கு வாழ்த்துக்கள்” என திராவிடர் கழக பிரச்சாரச் செயலா ளர் அருள்மொழி புகழ்ந்துரைத்ததில் ஆச்சரியமில்லை.
சனாதனிகளிடம் சிவாஜி சமரசம் செய்து கொள்ளும் போதும், விவாதத்தின்போதும் மோகனாகவே மாறி ஆவேசப்படும் பகத்சிங் கண்ணனின் நடிப்பும், தீப் பிழம்பாக வரும் வாதங்களும் எவராலும் மறுப்பதற் கில்லை. “அவர்களிடம் வாள் இல்லை.. ஆனால்... நாட்டை காக்க சாத்திரம் உதவவில்லை, வாளின் கூர்மைதான் உதவியது. அரசாள சாஸ்திரம் தேவையா... மாவீரர்கள் ஏன் சூத்திரர்களாகவே இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ரத்தம் சிந்தி, தியாக தீபத்தில் உரு வானவை மகாஅரசு. சிறுகூட்டத்திடம் சிக்கி சீரழிய லாமா” போன்ற வார்த்தை பிழம்புகளை முற்போக்கு சமூகத்தின் கு(மு)றலாகவே பார்க்க முடிகிறது. நாடகத் தின் நிறைவாக சிவாஜி தனது நண்பன், மெய்க்காப் பாளன் மோகனிடம் தனது நெருக்கடியை, பொறுப்பை உணர்த்தி இடும் கட்டளை, கருத்துப் பிரச்சாரத்தின் வலிமையை உணர்த்துகிறது. சனாதனத்தை வீழ்த்த அதுவே பெரும்பங்காற்றும் என்பதை பறைசாற்றுகிறது. குடியானவனாக வரும் மதியழகனின் உருவமும், பாமரத்தனமான கேள்விகளும் பகுத்தறிவைக் கிளறு கின்றன. நாடக நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன், இன்றைய அரசியல் சூழலில் அறிவுப் புரட்சி செய்ய வேண்டும், மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்பதை நாடகம் துல்லியமாக சுட்டிக்காட்டுகிறது என்றார். காகபட்டர்களின் தலைமையிடம் நாக்பூர் (ஆர்எஸ்எஸ் தலைமையகம்). டில்லியில் இருப்பவர்கள் சிவாஜியை போன்று முரண்பட்டவர்கள் அல்ல. காகபட்டர்கள் சொல்வதை செய்யக்கூடியவர்கள்தான். தேர்தலில் மட்டுமல்ல கருத்து ரீதியாகவும் இவர்களைத் தோற்கடிக்க வேண்டும். அதனை செய்வதற்கு இந்த நாடகம் தூண்டுகோலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“வடக்கே சத்திரியர்கள்தான் மன்னர்களாக முடியும். தென்னிந்தியாவில் வீரர்கள்தான் மன்னர்களாக முடி யும். தமிழன் பண்பாடு சமத்துவப் பண்பாடு. ஆண், பெண் வேறுபாடு, வர்ணாசிரம வேறுபாடு கிடையாது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்களின் வாரிசுகள் ஓபிசி பட்டியலில்தான் உள்ளனர். எல்லா ஜாதியும் ஆண்ட பரம்பரை என்கின்றனர். அனைவரும் சமம் என்ற நிலை இருந்தது. இதனை மறந்து அடிமைகளாக நிற்கிறோம். செம்மொழிகளில், சங்கப்பாடல்களில் அதிக பெண்பால் புலவர்கள் எழுதியிருப்பது தமிழில் தான். காசிருந்தால் சூத்திரனையும் சத்ரியனாக்க முடியும் என்பதை நாடகம் உணர்த்துகிறது. அது நம்மீது திணிக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும்” என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். “நாடகத்தில் தெறிக்கும் சொற்களும், அவை சொல்லுகிற செய்திகளும்தான் முக்கியம். சிவாஜி வரலாற்றின் உண்மையான பக்கங் களை வெளிக்கொண்டு வந்ததாலேயே சனாதனிகளால் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார்; அது தொடர் கிறது. நாடகம் உணர்த்திய கடமையை, நமக்குள்ள பொறுப்பை நிறைவேற்றுவோம்” என்று சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். “பகத்சிங் கண்ணன் குழுவினர் மிகச்சிறப்பாக நாடகத்தை நடத்தி உள்ளனர். ராமாயணம், மகாபாரதத்தை போதிப் பதுபோல, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற நாடகங்கள் வாயிலாக கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும். சனாதனத்திடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. கூறினர்.
“சனாதனிகளுடன் சமரசம் செய்து கொண்ட சிவாஜி, இன்றும் சனாதனிகளின் கையிலேதான் இருக்கிறார். இன்றும் சனாதனம் ஆட்சியில் இருக்கிற சூழலில், நாடகத்தின் பொருத்தப்பாடும் அப்படியே உள்ளது” என்றார் மேனாள் நீதியரசர் து.அரிபரந்தாமன். “இன்றைய சூழலோடு வசனங்களை பொருத்திப் பார்த்து பார்வையாளர்கள் கைதட்டினர். காகபட்டர் களாக இன்றைய ஆளுநர்கள் உள்ளனர். நமது போராட்டமும், புரிதலும் மேம்பட வேண்டும் என்பதை நாடகம் உணர்த்துகிறது” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சுட்டிக்காட்டினார்.
இயேசு கிறிஸ்து உயிர்ந்தெழுந்த நாளில் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆதிக்கவாதிகளுக்கு எதிராக கருத்தியல் உயிர்த்தெழுந்து கொண்டே இருக் கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது என்று கூறிய வி.சி.க. துணைப்பொதுச் செயலாளர் வன்னி யரசு, “சிவாஜியின் பேரனிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி, இன்றைக்கும் மராட்டியத்தில் பிராமணர்கள் (பேஷ் வாக்கள்) ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த பேஷ் வாக்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (மகர்) வீழ்த்திய இடம்தான் பீமாகோரேகான். அடுத்தடுத்த தலை முறையை விழிப்படைய செய்யும்போதுதான் சனாதனத்தை வீழ்த்த முடியும்” என்றார்.
தொகுப்பு: க. கவாஸ்கர்
நன்றி: ‘தீக்கதிர்' வண்ணக்கதிர், 16.4.2023
No comments:
Post a Comment