பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும்

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை,ஏப்.15- சட்டப் பேரவையில் 13.4.2023 அன்று நடைபெற்ற பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறையின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பதிலளித் துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

பிசி, எம்பிசி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் வினா வங்கி புத்தகம் வழங்கப்படும். இவ்விடுதிகளில் தூய்மைப் பணியாளர் களுக்காகவும், சுகாதாரத்தை மேம்படுத் தவும் ரூ.5 கோடிவழங்கப்படும்.

ரூ.16 கோடியே 13 லட்சம் செலவில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். மேலும், விடுதி சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு ரூ.20 கோடி வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி யில் ரூ.50 லட்சம் செலவில் ஓர் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்படும்.

கதர் கிராம தொழில்கள் துறை:

சென்னை எஸ்பிளனேடு பகுதியில் அமைந்துள்ள குறளக கட்டடத்தை இடித்து விட்டு அங்கு நவீன வசதி களுடன் ரூ.100 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

திருச்சி ரயில்வே சந்திப்புக்கு எதிரில், கதர் வாரியத்தின் உதவி இயக் குநர் மற்றும் மண்டலதுணை இயக் குநர் அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன. வியாபாரம் நிறைந்த, பொரு ளாதார மதிப்பு கொண்ட இடத்தில் உள்ள இந்தக் கட்டடம் 1966இல் கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இக்கட்ட டத்தை இடித்து, அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு எழில் மிகு வர்த்தகக் கட்டடம் ரூ.5.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் பகுதியில் கொள் முதல் செய்யப்படும் பச்சைத் தேனின் விலை கிலோவுக்கு ரூ.140-லிருந்து ரூ.155 ஆக உயர்த்தி வழங்கப்படும். திருப்பூர் கதர் வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய தேன் பதப்படுத்தும் நிலையம் நிறுவப்படும்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 3 கதர் அங்காடிகள்ரூ.23 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 பட்டு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய தறிகள் வழங்கப்படும். மேலும், 100பட்டு நெசவாளர்களுக்கு ரூ.8  லட்சம்  செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.சிறந்த கதர் நூற்பாளர், சிறந்த கதர் நெசவாளர் மற்றும் சிறந்த பட்டு நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

பனை பொருள் வளர்ச்சி வாரியம்:

ராமநாதபுரம் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ரூ.5 கோடியில் பனைப் பொருள் வர்த்தக மய்யம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டணத்தில் ரூ.35 லட்சம் மதிப் பீட்டில் பனைவெல்ல கிடங்கு மற்றும் பனை ஓலை தொழிற்கூடம் அமைக்கப் படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

No comments:

Post a Comment