சென்னை,ஏப்.16- நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவித் திறந்து வைத்ததற்காக தெலங்கானா முதலமைச்சருக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது 125 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ்-க்கு பாராட்டுகள். புத்தர் சிலைக் கும் தெலங்கானா தலைமைச் செயலகக் கட்டடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவிட வேண்டும் என்ற எண்ணம் சாலப் பொருத்தமானது, பிரமிப்பை ஏற்படுத் துகிறது என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment