உச்சநீதிமன்றம் ஆணை
புதுடில்லி, ஏப்.11 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அரசு அனுமதிக்காத எந்த பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடி யாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழ் நாடு அரசு பிறப்பித்த அரசா ணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிக மாக திறக்கவோ அல்லது பரா மரிக்கவோ அனுமதி வழங்க மறுத் தது. ஆனால் கரோனா கால கட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள் ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட் களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித் துள்ளதாகவும், அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உப கரணங்கள் பாதிப்படையும் எனக் கூறப்பட்டது. அதற்கு கடும் ஆட் சேபம் தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் சி.எஸ்.வைத்யநாதன், கழிவுகளை நீக்க அனுமதி வழங் கப்பட்ட சமயத்தில் வேதாந்தா நிறுவனம் அதை செய்யவில்லை.
அரசு அனுமதித்த பணிகள்
ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்னரே நீதிமன் றம் உத்தரவிட்டும் அவை அகற்றப் படவில்லை. ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு ஒருபோதும் தடையாக இல்லை என்றார். அதை யடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ளபடி கழிவு களை மட்டும் வேதாந்தா நிறுவனம் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும். அரசு அனும திக்காத வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடி யாது என மீண்டும் திட்டவட்ட மாகக் கூறி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment