தாவரங்களுக்கு வலி உண்டு; உணர்ச்சி உண்டு. அதை சத்தமாக வெளி உலகுக்கு தெரிவிக்கவும் செய்கின் றன. ஆச்சரியமாக இருக்கி றதா? அப்படித்தான் சொல்கி றது ஆராய்ச்சி இதழான 'செல்!' அண்மையில் அதில் வெளி வந்துள்ள கட்டுரையின்படி, தாவரங்கள் நீரின்றித் தவித்தாலோ, கிளை, இலை வெட்டப்பட்டாலோ மீஓலி அலைவரிசையில் ஒலி துடிப்பை வெளிப்படுத்துகின்றன. இது காற்றிலும் பரவக்கூடிய ஒலி தான்.
தக்காளி, புகையிலை செடிகளை ஆய்வகத்தில் வைத்து, அவற்றுக்கு நீர் விடாமல் கண்காணித்தபோது, அவை வெளியிட்ட'டிக், டிக்' ஒலியை விஞ்ஞானிகள் பெரிதுபடுத்தி பதிவு செய்தனர். அந்த ஒலி நமக்கு, சோளப் பொறி வெடிப்பது போன்ற ஓசையை ஒத்திருக்கிறது. தண்ணீரின்றி தவித்தாலோ, கிளை வெட்டப்பட்டாலோ மணிக்கு 35 முறை செடிகள் 'டிக், டிக்' ஒலியை வெளியிட்டன. ஆக, தாவரங்களுக்கும் ஒரு மொழி இருக்கத்தான் செய்கிறது.
No comments:
Post a Comment