குமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

குமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு பரப்புரை

குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக  பகுத்தறிவு   பரப்புரை நிகழ்ச்சி குமரிமாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம்  கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கழக தோழர்கள் மாஸ்டர் டெனிபோஸ், ஆரோக்கிய ரமேஷ், பெய்சில் மற்றும் தோழர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள், பகுத்தறிவு கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கி பரப்புரை செய்தனர். .கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாருடைய நூல்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய நூல்களை  பொதுமக்களுக்கு  வழங்கினர். பொதுமக்கள் ஆர்வமுடன் படித்தனர்.


No comments:

Post a Comment