தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் ராகுல் காந்தியின் பதவி பறித்த பாசிச பாஜக அரசுக்கு கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் ராகுல் காந்தியின் பதவி பறித்த பாசிச பாஜக அரசுக்கு கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்-கழகத் துணைத் தலைவர் கண்டன உரை

சென்னை, ஏப். 3- சென்னை - வள் ளுவர் கோட்டத்தில் 29.3.2023 அன்று மாலை 5 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்து தேர்தல் ஜன நாயகத்தை ஒழித்துக் கட்டுவ தற்கென பாசிச பாஜக அரசு திட்டமிட்டு நடத்தும் அரசி யலை கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆ.கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம் யூனிஸ்ட் (மார்க்கிஸ்ட்) தோழர் ஜி.இராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.வந்தி யத்தேவன், ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன், விசிக ரவிக் குமார் எம்.பி,  விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ். எஸ்.பாலாஜி, சிந்தனைச்செல் வன், ஆளூர் ஷாநவாஸ் மற் றும் பனை யூர் பாபு, மாவட்டச் செயலாளர் இரா.செல்வம், செல் லத்துரை உள்ளிட்டவர்கள் கலந் துக் கொண்டனர்.

திராவிடர் கழகத்தின் சார் பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள் பங்கேற்று உரையாற்றுகை யில் மிக முக்கியமான காலகட் டம் இது. இதில் சேதாரம் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாசிச பாஜ கவை எதிர்த்து களம் காண வேண்டிய நிலையில் இருக்கி றோம்.

ஒன்றிய ஆளும் அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்று சொல்லுபவர்கள் ஒரே ஜாதி என்று சொல்ல முன் வருவார்களா? என்ற கேள்வியை எழுப்பினார். அவர் களின் நோக்கம் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டுவது தான் அதற்காக அவர்கள் நாட்டையே சூறையாடி வரு கிறார்கள்.

பேச்சுரிமை, கருத்துரிமை, பகுத்தறிவு சிந்தனைகளை எடுத்துக் கூறுவதற்கு அனைவ ருக்கும் உரிமை உண்டு. அதனை ஒடுக்க நினைக்கிறார்கள். அதனை ஒரு போதும் அனுமதிக்க மாட் டோம்.

அனைவரும் ஒன்றிணந்து வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். என்றார் அவர்

No comments:

Post a Comment