ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (Central Equipment Identity Register - CEIR) என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அலை பேசி உள்பட தொலைந்து போன மின்னணு தொலைத்தொடர்பு பொருட்கள் IMEI (பன்னாட்டு அலைபேசி சாதனங்கள் அய்டென்டிட்டி) எண்ணுடன் பயனர்கள் விரைவாக புகார் அளிக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த போர்ட்டல் உங்கள் தெலைந்து போன அலை பேசியை இயங்காமல் தடை செய்ய உதவுகிறது. அதோடு தெலைந்து போன அலைபேசி அல்லது திருடப்பட்ட அலைபேசிகளைக் கண்டுபிடிக்கலாம், கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசியை மீண்டும் தடைநீக்கம் செய்ய லாம்.
IMEI நம்பர்
KYM (know your mobile) என்ற செயலி இலவசமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப் பிள் அலைபேசிகளில் வழங்கப்படுகிறது. இது உங்கள் அலைபேசி குறித்த விவரங் களை வழங்கும். இது உங்கள் போன் மிவிணிமி எண், என்ன பிராண்ட் மொபைல், மாடல் எண் போன்ற விவரங்களை வழங்கும். பொதுவாக மிவிணிமி நம்பர் உங்கள் போன் பில் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும். பில் பெட்டி இல்லையென்றால் உங்கள் போனில் *#06# என டயல் செய்து நம் சம்மதம் பெறக்கூடிய எண் IMEI பெற்று மிவிணிமி நம்பர் பெற்றுக்கொள்ளலாம்.
சிணிமிஸி மூலம் எவ்வாறு புகார் அளிப்பது?
தற்போது, சிணிமிஸி சேவை யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து 37 மாநிலங்களிலும் கிடைக்கிறது. தொலைந்து போன அல்லது திருடப் பட்ட அலைபேசியைப் பற்றி புகாரளிக்க, மொபைல் எண், மிவிணிமி எண் மற்றும் போன் இன்வாய்ஸ் பில் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இதேபோல் நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள காவல் நிலை யத்திலும் புகார் அளிக்கலாம். சிணிமிஸி இணையதளத்தின் மூலம் உங்கள் தொலைந்து போன அலைபேசியைத் தடை செய்வதன் மூலம் மத்திய தரவுத் தளத்தில் உங்கள் எண் பிளாக் (தடை) செய்யப்படும். பின்னர் அதைப் பயன் படுத்த முடியாது.
கிடைத்த மொபைலை அன்பிளாக் செய்வது எப்படி?
தொலைந்து போன அலைபேசி உங்களுக்கு கிடைத்தப்பின் சிணிமிஸி இணையதளம் மூலம் தடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விவரங்களை உள்ளிட்டு, அன்பிளாக் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதன் மூலம், சிணிமிஸி இணையதளம் வழியாக அன்பிளாக் செய்யலாம்.
No comments:
Post a Comment