முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சிக்குக் குடிநீர் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சிக்குக் குடிநீர் திட்டம்

மதுரை,ஏப்.19- முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை 60 விழுக்காட்டளவில் முடிந்துள்ளன. 

மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக அம்ரூத்-3 திட்டத் தின் கீழ், ரூ.1,685.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடி நீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து நேரடியாக மது ரைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இப்பணிகள் பகுதி-1, பகுதி-2 என 2 பகுதிகளாக நடக்கின்றன. திட்டப் பணிகளை மேயர் இந்திராணி தலைமையிலான அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் லோயர்கேம்ப் பகுதிக்குச் சென்று பார்வையிட் டனர்.

இந்நிலையில், மதுரை மாநகரப் பொறியாளர் அரசு கூறியதாவது: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பகுதி 1இல் உள்ள திட்டப் பணிகள் ஓரளவு நிறைவடையும் தருவாயில் உள் ளன. வரும் டிசம்பரில் பெரியாறு அணையிலிருந்து குடிநீரை சுத்தி கரித்து மதுரையில் உள்ள மேல் நிலை தொட்டிகளுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

இந்தப் பகுதி -1 திட்டம் முடிந்த தும் மாநகராட்சி 100 வார்டுகளி லும் தற்போது விநியோகம் செய் யப்படும் பழைய குடிநீர் குழாய்களி லேயே பெரியாறு கூட்டுக் குடி நீரையும் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பகுதி 2இல், பழைய 72 வார்டுகள், விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறும்.

பழைய வார்டுகளில் 2025ஆம் ஆண்டும், விரிவாக்கம் செய்யப் பட்ட வார்டுகளில் 2024ஆம் ஆண்டும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையும். அதன் பின்னர், புதிய குழாய்கள் மூலம் முல்லை பெரியாறு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

தற்போது 60 விழுக்காட் டளவில் பணிகள் நிறைவடைந் துள்ளன. அவ்வப்போது பொறியா ளர்கள் குழுவினர், முல்லைப் பெரி யாறு சென்று பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நிர்ணயிக்கப் பட்ட காலகெடுவுக்குள் பணிகளை முடிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment