சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் பைலட் டுகள் அனைவருமே ஹிந்திக்காரர்கள்.
புதிய ரயில் பயணத்தைத் துவங்கும் போது மூத்த ஓட்டுநர்களை வைத்துத்தான் ரயிலை இயக்குவது வழக்கமான ஒன்று. காரணம் அவர்கள் அந்தப்பாதை யில் உள்ள பல்வேறு சிக்கல்களை நன்கு அறிந்திருப் பார்கள்.
ஆனால், மோடி துவக்கி வைக்கும் வந்தே பாரத் என்ற சென்னை - கோவை ரயிலில் லோகோ பைலட்டுகள் என்ற ரயில் ஓட்டுநர்கள் அனைவருமே ஹிந்திக்காரர்கள்
தேர்ந்தெடுக்கும் போதே ஹிந்தி தெரியாத ஓட்டுநர்களை - புறக்கணித்து, வடக்கே இருந்து வந்த ஹிந்திக்காரர்களை பணி அமர்த்தி உள்ளது தென்னக ரயில்வே.. ஹிந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப் பட்டதற்கு விளக்கம் கொடுத்த தென்னக ரயில்வே - சீனியர் லோகோபைலட்டுகளுக்கு ஹிந்தி தெரியாது. ஆகவே வடக்கிலிருந்து ஓட்டுநர்கள் வரவழைக்கப்பட்டனர் என்று புதிரான விளக்கத்தை வேறு கொடுத்துள்ளது. புத்திசாலித்தனம் என்று நினைத்து கூறியுள்ளது.
மோடி காசி தமிழ்சங்கமம், குஜராத் தமிழ்ச்சங்கமம் என்று அமைத்து தமிழை வளர்க்கிறேன் என்று நாடக மாடிவருகிறார்,
காசி தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடி அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் பிரதமருக்கு கடிதம் எழுதிய உள்ளனராம். அதில் சில கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளாராம். இது ஒரு பக்கம் தந்திரம், ஆனால் மற்றோர் பக்கம் ஒன்றிய அரசு என்ன செய்கிறது?
இங்கே ஹிந்தி தெரியாத காரணத்தால் சீனியர் ஓட்டுநர்கள் புறக்கணிக்கப்பட்டு ஹிந்திக் காரர்களை பணி அமர்த்தி வருகிறது ஒன்றிய ரயில்வே அமைச்சரகமும், தென்னக ரயில்வேயும்.
இதற்கு முன்பே தமிழ்நாட்டில் இரயில் நிலையங் களிலும் பயண அனுமதிச் சீட்டு வழங்கும் இடங் களிலும் ஹிந்தி வாலாக்கள்தான் நிறைந்து வழிந்து கொண்டுள்ளனர்.
டிக்கெட்டு பரிசோதனையாளர்களாகவும் ஹிந்தி வாலாக்கள் வர ஆரம்பித்துள்ளனர். பயணிகள் பேசுவது அவர்களுக்குப் புரியாது. டிக்கெட் பரிசோதனைக்காரர்கள் பேசுவது பயணிகளுக்கு புரியாது.
ஏற்கெனவே வடநாட்டுக்காரர்கள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருகின்றனர். இந்தப் பிரச் சினையும் இரயில்வே துறையில் பணியமர்த்தப் படுதலும் ஒன்றல்ல - வெவ்வேறானவை.
சீனியர் ரயில் ஓட்டுநர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் போது ஹிந்தி தெரிந்தவர்களைக் கொண்டு வருவது எந்த வகையில் சரியானது?
மக்களோடு தொடர்புடைய துறைகளில், தாய்மொழி தெரியாதவர்களைப் பணியமர்த்துவது எந்த வகையில் நியாயம்?
ஜோலார்ப்பேட்டை இரயில் நிலையத்தில் நின்றால் நாம் இருப்பது தமிழ்நாடா அல்லது பீகாரா என்று நினைக்கத் தோன்றும்.
இரயில்வே எழுத்தர் தேர்வில் தமிழில் முதல் மதிப் பெண்கள் எடுத்தவர்கள் அரியானாக்காரர்கள் என்ப தெல்லாம் நம்பத் தகுந்ததுதானா?
பல்லாயிரக்கணக்கில் வேலை இல்லாப் பட்ட தாரிகள் தமிழ்நாட்டில் நிரம்பி வழியும்போது இது போன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவது நல்லதல்ல - உகந்ததும் அல்ல - அல்லவே அல்ல!
No comments:
Post a Comment