'தினமலருக்கு' சந்தேகமா - தொடை நடுக்கமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

'தினமலருக்கு' சந்தேகமா - தொடை நடுக்கமா?

அகில இந்திய அளவில் சமூகநீதி மாநாடு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொலி வழி நடைபெறுகிறது. 

அகில இந்திய அளவில் பல மாநில முதலமைச்சர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞர்களும், இந்திய அளவில் சமூகநீதியை அழுத்தமாகப் பதிவு செய்யப் பாடுபடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, வைகோ எம்.பி., எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., போன்றவர்களும் பங்கேற்கின்றனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்குமுன் சமூகநீதி சக்திகள் ஓரணியில் திரளுகின்றன என்ற நிலையில், திரி நூலாகிய ‘தினமலர்' எப்படி தலைப்புப் போடுகிறது தெரியுமா?

‘‘ஸ்டாலின் நடத்தும் சமூகநீதி மாநாடு அரசியல் ஆதாயம் தருமா?'' என்பதுதான் ‘தினமலர்' தலைப்பு.

சமூகநீதி என்பது அரசியல் ஆதாயத்துக்கானதல்ல - பெரும்பாலான மக்களுக்கானது - அரசியல் சட்டப்படிக் கானது - அதுவே அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

‘தினமலர்' கூட்டத்தின் அச்சம்தான் இந்தத் தலைப்புக் கான காரணம், புரிகிறதோ!

No comments:

Post a Comment