ஆவடி வே.கண்ணபிரான் நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

ஆவடி வே.கண்ணபிரான் நினைவேந்தல்

ஆவடி, ஏப். 15- ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் க.கார்த்திகேயன் தந்தையார் வே.கண்ணபிரான் இரண்டாம் ஆண்டு நினைவுவேந்தல் இரண்டாவது தெரு, செல்வா நகர், ஆவடி கோவர்த்தனகிரி விரிவாக் கம், 11.4.2023 அன்று மாலை ‌6-30 மணிக்கு நடைபெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் அமைப்பு செயலா ளர் வி.பன்னீர் செல்வம், மாவட்ட தலைவர் பா.தென்னரசு, மாவட்ட செயலாளர் க.இளவரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.ஜானகிராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.முருகேசன், மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழக தலைவர் கி.ஏழுமலை, பொதுக்குழு உறுப் பினர் பூவை செல்வி, ஆவடி நகர தலைவர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலையில்  க.கார்த்திக்கேயன் வரவேற்புரை யுடன் நடைபெற்றது.

வே.கண்ணபிரான் படத்தை  மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், தந்தை பெரியார் அவர்கள் படத்தை மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்  செயலாளர் வெங்கடேசன் திறந்து வைத்த பின் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை உரையாற்றியதை அடுத்து கருத் தரங்கம் துவங்கியது.

கருத்தரங்கில் சுயமரியாதை சுகவாழ்வு பெற்றிட சமூக நீதி காப் போம் என்ற தலைப்பில் திராவிடர் கழக மண்டல மகளிரணி செயலா ளர் இறைவி, பெண்ணுரிமை பேணுவோம் தலைப்பில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை, பகுத்தறிவை பறைசாற்றுவோம் தலைப்பில் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றிய பின் நிறைவுரையாக புதிய குரல் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா‌ உரையாற்றினார்.

ஆவடி நகர செயலாளர் தமிழ் மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இறுதியாக சு.கலைவாணி நன்றி யுரையுடன் நிறைவுபெற்றது. 

நிகழ்வில் கழக தோழர்களும் உறவினர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

No comments:

Post a Comment