சம்பல்பூர், ஏப்.20- ஒடிசாவில் வன்முறை பாதித்த சம்பல்பூர் நகரத்துக்கு செல்ல விடாமல், ஒன் றிய அமைச்சர் பிஷேஸ்வர் துடு தலைமையிலான பா.ஜ.க. குழுவி னரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வகுப்புவாத வன்முறை வெடித்தது. தீ வைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் பலர் கைதாகினர். மேலும், பழங்குடி இன வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட் டுள்ளது. இணையதளச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொல்லப்பட்ட வாலிபரின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக அங்கு ஒன்றிய பழங் குடியினர் நலத்துறை அமைச்சர் பிஷேஸ்வர் துடு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூவல் ஓரம், சுரேஷ் பூஜாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கொண்ட பா.ஜ.க. உயர் மட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் ஜார்சு குடா-சம்பூல்பூர் சாலையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் அனைவரும் தெல்கோலி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, கைதாகினர். இதுபற்றி சம் பல்பூர் காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் தாபன் குமார் மொகந்தி கூறுகையில், “சம்பல்பூ ரில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144இன் கீழ் தடை உத்தரவு போட்டுள்ளதால் பா.ஜ.க. குழுவி னர் அங்கே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு அம லில் இருக்கிறபோது. நகருக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது" என தெரிவித்தார்.
சம்பல்பூர் செல்லவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்திய போது ஒன்றிய அமைச்சர் பிஷேஸ் வர் துடு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வன்முறையில் பழங்குடி இன வாலிபர் கொல்லப்பட்டுள்ள சம்பல்பூருக்கு சென்று அவர்களது குடும்ப உறுப் பினர்களை சந்திக்கும் கடமை, பழங்குடியினர் நலத்துறை அமைச் சராகிய எனக்கு உண்டு.
ஆனால் அதைத் தடுத்த ஒடிசா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன், நடுவழியில் காவல் துறையினர் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனர்" என குறிப் பிட்டார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, "இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசிடம் எடுத்துச்செல்வேன். சம் பல்பூர் மாவட்ட நிர்வாகம் என்னையும். எனது சகாக்களையும் தடுத்து நிறுத்தியது. அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித் துள்ளோம்" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment