நாகை,, ஏப். 3 - நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட் டாரக்குடியில் திராவிட மாண வர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலை மையில் மாவட்ட இளைஞ ரணி தலைவர் ராஜ் மோகன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அறிவுமணி, மாவட்ட மாணவர் கழக செய லாளர் குட்டிமணி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திராவிட மாணவர் கழக சட்டக் கல் லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை யாற் றினார்.
கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஜெகதா பட்டினத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற உள்ள மீனவர் நல பாது காப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் நாகை மாவட்டம் சார்பில் 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய மாணவர்கள் பெரியார் தாசன், அருண்குமார், கோகுல், ஜனா, தினேஷ், விஜயராகவன், பிரியதர்ஷன், கீர்த்தி வாசன், சந்தோஷ், மணிகண்டன், ராஜேஷ் ஆகி யோர் திராவிட மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இக் கலந்துரையாடல் கூட்டம் இரவு 8:30 மணியளவில் நிறை வடைந்தது.
No comments:
Post a Comment