சென்னை, ஏப். 24- 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையும், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மொழிகள் பள்ளி, மொழிக் கல்வி மற்றும் மொழி தொழில் நுட்பப்புலமும் இணைந்து 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர் பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்துகிறது.
இந்த 2 நாள் கருத்தரங்கம் இணையவழி வாயிலாக நடைபெற உள்ளது. 25ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில், அலிகர் முஸ் லிம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முகமது குல்ரெஸ், செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவ னத்தின் இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பங் கேற்று பேசுகின்றனர்.
இதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் சண்முகதாஸ், கருத்தரங்க ஒருங் கிணைப்பாளர் சாந்தினிபி, நூல கம் மற்றும் தகவல் அறிவியல் பேராசிரியர் நிஷாத் பாத்திமா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இதில் மலேசியா, ஜெர்மனி, தான்சானியா ஆகிய உலக நாடுக ளில் இருந்து 12 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொல்காப்பியம் மற்றும் செம்மொழித்தமிழ், வர லாற்றுடனான அதன் தொடர்பு கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.
வருகிற 26ஆம் தேதி நடை பெறும் நிறைவு விழாவில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவர் மிர்ஷா அஸ்மெர் பெக் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
மேலும் அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழக ஹிந்தி துறையின் தலைவர் முகமது ஆசிக் அலி கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் புவனேசுவரி வாழ்த்துரை வழங்க உள்ளார்.
No comments:
Post a Comment