சென்னை, ஏப். 19- பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்
சட்டப்பேரவையில் 17.4.2023 அன்று கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் கே.பி.சங்கர் (திருவொற்றியூர்) பிரதான வினாவை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து, மாரிமுத்து (இ.கம்யூ னிஸ்ட்), மு.பெ.கிரி (திமுக) ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.
அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பதில்:
திருவொற்றியூர் பகுதியில் சிறப்பு முகாம்களை நடத்தி காட்டு நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த மக்க ளுக்கு பழங்குடியினர் சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்வாகிறார்கள். இதனால், சான்றிதழ் கேட்கும் போது மிகவும் கவனத்துடன் கொடுக்க வேண்டியுள்ளது.
விண்ணப்பிக்கும் போது அதற் குரிய சான்றிதழ்கள் சரியாக இருப் பதில்லை. அவர்கள் பூர்விகமாக இருந்த இடத்துக்கு கேள்வியாகக் கேட்டு, தகவல் வந்த பிறகே சான் றிதழ் கொடுக்க வேண்டியிருக் கிறது. உரிய ஆய்வு இல்லாமல் வழங்கினால், சான்றிதழ் அளிக்கும் அதிகாரிக்கும் பிரச்சினை வரு கிறது.
சான்றிதழ் பெற்ற பிறகு படித்து, ஒன்றிய, மாநில அரசு பணிக்கு செல்லும் போது தவறான சான்றிதழாக இருந்தால் சம்பந்தப்பட்ட வர்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ரத்த சம்பந்தமான உறவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை அடிப் படையாகக் கொண்டு சான்றி தழ்கள் வழங்குவதில் சிக்கல் இருப் பதில்லை.
அவர்களில் பல சமுதாய மக்களும் எஸ்.டி. சமுதாய சான்றிதழ் வாங்க வேண்டும் என நினைக்கி றார்கள். சான்றிதழ் அளிக்கும் போது, நாயக்கர் என்றிருப்பவர்கள், காட்டு நாயக்கர் என வாங்க நினைக்கிறார்கள்.
படிப்பதற்கும், இடஒதுக்கீட்டின் கீழ் தகுதியான இடம் கிடைக்கவும் போராடுகிறார்கள். எனவே, தகுதியானவர்களுக்கு சான்று வழங்க நினைக்கிறோம். ஒருவருக்கு வழங்குவது மற்றவரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து விடக் கூடாது என்றார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன்.
No comments:
Post a Comment