மருத்துவத் துறையில் ஒரு மகுடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

மருத்துவத் துறையில் ஒரு மகுடம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் பெருமைக்குரிய டாக்டர் மர்யம் அபீபா அன்சாரி அய்தராபாத்தைச் சேர்ந்தவர்.

தெலங்கானா மாநிலம் மாலேகான் அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உர்து மீடியத்தில் பயின்ற மர்யம் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் முதல் மதிப் பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் குடும்பம் அய்தராபாத்திற்கு இடம் பெயர 2012இல் மேல்நிலைப்பள்ளி தேர் விலும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வருக்கு உஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

2017இல் அய்ந்து பாடங்களில் தங்கப் பதக்கம் வென்று மருத்துவராகத் தேர்ச்சி பெற்றவருக்கு, உஸ்மானியா கல்லூரி நிர்வாகம் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை மருத்துவம் பயில இலவச அனுமதி வழங்கியது. பின்னர் இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு டிப்ளமோ MRCS சிறப்புத் தகுதி பெற்ற மர்யம் அபீபா மீண்டும் 2020 நீட் நுழைவுத் தேர்வு மூலம் M.Ch  அட்மிஷன் கிடைத்து உஸ்மானியாவிலேயே சேர்ந்து பயின்று நாட்டின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், மிக வயது குறைந்த முதல் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் சிறப்புக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

- குளச்சல் ஆசிம்


No comments:

Post a Comment