சென்னை,ஏப்.16- ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள் கையை வடிவமைக்க, மேனாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு சார்பில் ஜூன் மாதத்துக்குள் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிக்கை தயாரிப்பு பணி இன்னும் முடியாததால், குழு சார்பில் 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. சென்னையில் 13.4.2023 அன்று நடந்த மாநில கல்விக் கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை கடிதம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியை முடித்து அரசிடம் செப்டம்பரில் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment