"ஆன்மா"வாம் - நீதிபதியின் சொல்லாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

"ஆன்மா"வாம் - நீதிபதியின் சொல்லாடல்!

சென்னை, ஏப்.14 மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்யும் வகையில், நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக இந்த வழக்கு நேற்று முன்தினம் (12.4.2023) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, "ஜெயலலிதா இறந்து பல ஆண்டுகளாகி விட்டது. இன்னமும் இதுபோல வழக்கு தொடர்ந்து ஏன் அவருடைய ஆன் மாவை தொந்தரவு செய்கிறீர்கள்?" என்றும், "அந்த ஆன்மாவை அமைதியாக இருக்க விடுங்கள்" என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் "இதுபோன்ற வழக்குகளை தொடர்ந் தால் ஜெயலலிதா மீது பாசம் வைத்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு எரிச் சலும், மன வேதனையும்தான் ஏற்படும்" என்றார்.

மேலும், "ஆறுமுகசாமி ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்க வேண்டுமென அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக வழக்கு தொடர மனுதாரருக்கு என்ன அடிப்படை முகாந்திரம் உள்ளது?" என கேள்வி எழுப்பினார்.


No comments:

Post a Comment