முக்கிய திருப்பம்: அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

முக்கிய திருப்பம்: அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு

பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்திந்திய கட்சிகளை ஒன்றிணைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப். 1-  நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக் கும் முயற்சியாக, சமூகநீதி குறித்து ஏப்.3ஆம் தேதி காணொலி கூட் டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற வுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கி ணைக்கும் முயற்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட் டுள்ளார். இதற்காக அவர் பல் வேறு கட்ட முயற்சிகளை மேற் கொண்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை பிப். 2ஆம் தேதி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் இணையும் படி நாடுமுழுவதும் பாஜக தவிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர் கள், தமிழ்நாட்டில் உள்ள கூட் டணி கட்சிகளின் தலைவர்கள் என 38 பேருக்கு அழைப்பு விடுத் தார்.

இதில், காங்கிரஸ் சார்பில் வீரப்ப மொய்லியை சோனியா காந்தி உறுப்பினராக அறிவித்தார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி களின் தலைவர்களும் முதலமைச் சரின் இந்த முயற்சியைப் பாராட் டியதுடன், ஆதரவும் தெரிவித்தி ருந்தனர். தொடர்ந்து, கடந் தாண்டு பிப்.27ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ முதல்பாகம் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. 

இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவானது, பாஜகவுக்கு எதி ரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாறியுள்ளதாக அப் போதே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந் தாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதிலும், காங்கிரஸ் தேசிய தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

இதில், நேரடியாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்தார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து நிகழ்வுகளிலும் சமூக நீதியை முன்னிறுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அடுத்தகட்டமாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நட வடிக்கையை எடுத்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மனப் பான்மையில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஏப்.3ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோ சனை நடத்த முடிவெடுத்துள்ளார். இதுபற்றி அனைத்து தலைவர் களுக்கும் அவர் அழைப்பு விடுத் துள்ளார். இதில், சமூக நீதியை முன்னெடுப்பது குறித்து விவாதிக் கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.  டில்லி யில் இருந்தபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தெலங் கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், காஷ்மீர் மேனாள் முதல மைச்சர் பரூக் அப்துல்லா, திரிண மூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 18 தேசிய தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின் றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்க காங் கிரஸ் கட்சி தலைமைக்கும் முதல மைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதவிர, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரையும் முதலமைச்சர் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததை முன்னிட்டு, அக்கட்சி பிரதிநிதிகளும் காணொலி கூட் டத்தில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு சமூகநீதி சார்ந்த அமைப்புகளின் தலை வர்களும் இதில் பங்கேற்க உள்ள தாகத் தெரிகிறது. தமிழ்நாட் டிலும் பல்வேறு கூட்டணிக் கட்சி களின் தலைவர்களுக்கும் முதல மைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment