பாயும் சீனாவும் பதுங்கும் பா.ஜ.க. அரசும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

பாயும் சீனாவும் பதுங்கும் பா.ஜ.க. அரசும்

திபெத் தொடர்பாக இந்தியாவின் நிலைப் பாட்டுக்கும், சீனா – இந்தியா உறவுக்கும் என்ன தொடர்பு?

சீனாவின் செயலுக்கு உரிய நேரத்தில் எதிர்வினையாற்ற தவறிவிட்டதா இந்தியா?

சீனா குறித்துப் பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து வருகிறாரா?

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பதிலடி கொடுப்பது தொடர்பாக பேசுவதால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

ஜெய்சங்கரின் இந்த அணுகுமுறையை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், ’இவ்வளவு மெல்லிய தோல்’ இருப்பது சரியல்ல என்று கூறியிருந்தார்.

ஜெய்சங்கர் கொஞ்சம் ‘கூலாக’ இருக்க வேண்டும் என்றும் தரூர் கூறினார்.

மேற்கத்திய நாடுகளுக்கும், பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்கும் எந்த வாய்ப்பையும் ஜெய்சங்கர் தவறவிட்டதில்லை. ஆனால் சீனாவைப் பொருத்தவரை அவரது அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை மாண்டரின் மொழியில் மாற்றியுள்ளது சீனா. கடந்த திங்களன்று மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.

இந்த பெயர் மாற்றங்கள் அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சியின் போதுதான் செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் இந்த முடிவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகவும் கண்டிப்பான எச்சரிக்கையை அளித்துள்ளது.

திபெத் மீதான தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்ற வேண்டுமா?

“இதுபோன்ற முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே உள்ளது, எப்போதும் இருக்கும். இத்தகைய முயற்சிகள் உண்மை நிலையை மாற்றாது,” என்று இந்தியா தனது பதிலில் கூறியிருந்தது.இந்தியாவின் இந்த பதில் மிகவும் பலவீனமாகவும், மென்மையாகவும் இருக்கிறது என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் பிரபல உத்தி வகுப்பாளர் பிரம்மா செல்லானி இந்தியாவின் பதிலை மறுபதிவு செய்து, “சீனா மீண்டும் இந்தியாவைத் தூண்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் பல இடங்களின் பெயர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன,” என்று எழுதினார்.”தைவானை விட அருணாச்சல பிரதேசம் மூன்று மடங்கு பெரியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சரியான பதிலை அளிக்கத் தவறிவிட்டது. இந்த விஷயம் நடந்த மறுநாள் இந்தியா வெளியிட்ட பதில் மிகவும் மென்மையாக இருக்கிறது. சமூக ஊடகங்களின் யுகத்தில் சரியான நேரத்தில் பதிலளிப்பது முக்கியம். ஏனென்றால் நமது அணுகுமுறையை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்காது. சீனாவின் தகவல் போரை ஒப்பிடும்போது இந்திய அரசு இன்னும் மெதுவாகவே உள்ளது” என்றார்.

இவ்வளவு நடந்த பிறகும் திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா கருதுகிறது என்று மற்றொரு ட்வீட்டில் பிரம்மா செல்லானி எழுதியுள்ளார். இதை விட சுய அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல் வேறு என்ன இருக்க முடியும் என்று செல்லானி குறிப்பிட்டார்.பிரம்மா செல்லானியின் கூற்றை ஆதரித்த இந்தியாவின் மேனாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல், “இந்தியாவின் பதில் மிகவும் மென்மையானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தியா இன்னும் கடுமையான மொழியில் பதிலளித்திருக்க வேண்டும். திபெத் மீதான ஆக்கிரமிப்பின் அடிப்படையில் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கோருகிறது. அத்தகைய சூழ்நிலையில் நாமும் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியாவின் அணுகுமுறை உண்மையில் உறுதியற்றதாக உள்ளதா?அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின், ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் அவ்வாறு கருதவில்லை. “அருணாச்சல பிரதேசம் தொடர்பாக சீனா செய்து கொண்டிருப்பது புதிய விஷயம் அல்ல. பெயர் மாற்றம் தொடர்பாக இந்தியா அளித்த பதில் போதுமானது. அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினை எதுவும் இல்லை,” என்று பேராசிரியர் பந்த் குறிப்பிட்டார்.“லடாக்கில் பிரச்சினை உள்ளது. ஏனென்றால் சீனா அங்கு நிறைய பணிகளை செய்கிறது. அதற்கு இந்தியா பதில் அளிக்க வேண்டும். அங்கே சென்று பேச்சு மூலமாக பதில் கூற முடியாது. இந்தியாவும் எல்லையில் உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. சீனாவும் அதிக வேலைகளைச் செய்கிறது. பதில் கூற நாம் தயாராக இருந்தால் மட்டுமே சீனாவை  எதிர்கொள்ளமுடியும். நான்கு தசாப்தங்களுக்கு முன்பே சீனாவை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இந்தியா தகுந்த பதிலடி தந்திருக்கும். உங்கள் பதில் உங்கள் திறனைப் பொருத்தே அமையும். 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனா அளித்த பதில்போல இன்றைய பதில் இல்லை. அதன் திறன் அதிகரித்த போது, பதிலும் ஆக்ரோஷமாக மாறியது,” என்கிறார் பேராசிரியர் பந்த். “இந்தியாவும் தனது திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் பதில், வரும் காலங்களில் மாறலாம். விஷயங்களை சிக்கலாக்குவதால் எதுவும் கிடைக்காது. திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்,” ‘ஒரே சீனா கொள்கையை’ ஏற்க மறுக்க வேண்டும்’ என்று பலர் கூறுகின்றனர்.

“அமெரிக்காவால் கூட இதை செய்ய முடியவில்லை. இதையெல்லாம் செய்து நாம் என்ன சாதிக்கமுடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். “இப்போது தலாய்லாமா கூட சுதந்திர திபெத்திற்கு பதிலாக தன்னாட்சி திபெத்தைப் பற்றிப் பேசுகிறார். தைவானிலும் சீனா தொடர்பாக மக்கள் பிளவுபட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே சீனா கொள்கையை ஏற்காமல் நாம் என்ன சாதிப்போம்,?” என்று பேராசிரியர் பந்த் கேட்கிறார்.“கடந்த காலங்களில் நாம் பல தவறுகளை செய்துள்ளோம். சீனாவின் ஆக்கிரமிப்புக்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன, ஆனால் நாம் கொள்கையை மாற்றவில்லை. முன்பே கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

நரேந்திர மோடி அரசின் மென் போக்கின் பொருள்கடந்த பத்தாண்டில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சீனா பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு லடாக்கின் கல்வானில் நடைமுறை கட்டுப்பாட்டுக் கோட்டில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருநாடுகளையும் சேர்ந்த மொத்தம் 24 வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு இன்னும் பதற்றம் உள்ளது, தீர்வு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.சீனாவை எதிர்கொள்ள ஏராளமான ராணுவ வீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ளதாகவும், ராணுவ கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் பாரதிய ஜனதா அரசு கூறுகிறது. 2020இல் எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா தனது நிலத்தை சீனாவிடம் இழந்துவிட்டது என்று கூறும் சில செய்திகளும் வெளியாகியுள்ளன.சீனாவை பற்றி பேசுவதை இந்திய பிரதமர் தவிர்த்து வருகிறார். மோடி அரசின் மவுனம் சீன எதிர்ப்பு உத்தியின் ஒரு பகுதியா அல்லது கட்டாயமா? புது டில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு அரசியல் மய்யத்தின் இணைப் பேராசிரியரான ஹேப்பிமோன் ஜேக்கப், அமெரிக்க இதழான ஃபாரின் பாலிசியில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.”சீன ஆக்கிரமிப்புக்கு இந்தியா பதிலளிப்பது வெறும் ராணுவம் தொடர்பானது மட்டும் அல்ல. அரசியல் மற்றும் வணிக நலன்கள் காரணமாக இது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தால், அது எப்போது, எப்படி பதிலளிக்கும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியமானது,” என்று ஜேக்கப் இந்த கட்டுரையில் எழுதியுள்ளார். 2022இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 டிரில்லியன் டாலராகவும், இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலருக்கு குறைவாகவும் இருந்தது.கடந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 230 பில்லியன் டாலர்கள் ஆகும். இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான இந்தப் பெரிய இடைவெளி காரணமாக சீனாவின் கை மேலோங்கி உள்ளது.*

சீனாவுடன் மோதல் சூழ்நிலை ஏற்பட்டால், அமெரிக்கா மற்றும் பிற சக்திகள் வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவாக வரும் அளவிற்கு அந்த நாடுகளுடனான ராஜாங்க உறவு வலுவாக உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சீனாவுடன் பதற்றம் ஏற்பட்டால் தனக்கு ஆதரவாக தனது கூட்டாளிகள் வருவார்கள் என்ற எந்த உத்தரவாதத்தையும் இந்தியா இதுவரை பெறவில்லை,” என்று ஹேப்பிமோன் ஜேக்கப் எழுதியுள்ளார்.“இந்தியாவின் வர்த்தகம் சீனாவை  சார்ந்திருக்கிறது, உலகில் உள்ள எந்த நாட்டுடனும் இந்தியாவுக்கு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. ஒரு ராணுவ நெருக்கடி ஏற்பட்டால், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட் என்ற குழுவின் ராணுவ உதவியை கற்பனை செய்வது மிகவும் அவசரமாக இருக்கும். சீனாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் எந்தவொரு வெளி நாட்டிலிருந்தும் ராணுவ உதவியை எதிர்பார்ப்பது இப்போதுவரை கடினம்.”

“சீனாவுடனான மோதலில் பின்தங்கினால் என்ன செய்வது என்பது குறித்து இந்தியாவிடம் தெளிவான திட்டம் இல்லை. இந்தியாவை விட சீனாவுக்கு அதிக பலம் உள்ளது. அது இந்தியாவுக்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கக்கூடும். இந்தியா வெற்றி கிடைக்கும் என்ற உறுதியுடன் போரில் ஈடுபட முடியாது, ஆறு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது,” என்று ஹேப்பிமோன் ஜேக்கப் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்கு பல கடுமையான காயங்களை சீனா ஏற்படுத்தக்கூடும் என்று ஜேக்கப் கூறுகிறார்.“இந்தியா உலகின் அய்ந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. சீனாவின் மலிவான தயாரிப்புகளும் அதற்கு பங்களிக்கின்றன. இந்த தயாரிப்புகள், உரங்கள் முதல் தரவு செயலாக்க அலகுகள் வரை உள்ளன. எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அதன் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிப்பது இந்தியாவுக்கே பாதகமாக அமையக்கூடும். சமீபத்தில் அரவிந்த் பனகரியாவும் இதை அடிக்கோடிட்டிருந்தார்.” என்று அவர் எழுதியுள்ளா

திபெத் தொடர்பாக தவறு செய்தது யார்? திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கருதி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக 2017ஆம் ஆண்டு இந்தியாவின் மேனாள் பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவ் கூறியிருந்தார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் திபெத் தொடர்பாக நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை தாக்கி பேசி வருகிறார்.திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா கருதியது உண்மையில் தவறா? “கடந்த காலங்களில் சீனாவைப் புரிந்து கொள்வதில் நாம் தவறு செய்துள்ளோம். இந்த தவறுகளின் விளைவு நம் அனைவரின் கண் முன்னால் உள்ளது. சீனாவை புரிந்து கொள்வதில் தாமதம் செய்துவிட்டோம்,” என்று பேராசிரியர் ஹர்ஷ் பந்த் குறிப்பிட்டார்.2003 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கருதியது. அதே நேரம் சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக சீனா அங்கீகரித்தது. இது நமது செயல் உத்தி தவறு. நாம் அதை அவசரப்பட்டு செய்துவிட்டோம். திபெத்தை கைநழுவிப்போக விட்டிருக்கக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே நாம் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். சீனா சட்ட விரோதமாக திபெத்தை ஆக்கிரமித்துள்ளது, இதை ஏற்க முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி 2017 இல்  கூறினார்.”

“வாஜ்பாய் அரசு அதை செயல் உத்தி ரீதியாக  தவிர்த்திருக்க வேண்டும். அப்போது திபெத்துக்கு பதிலாக சிக்கிம் மீது கவனம் செலுத்தினோம். சீனா சிக்கிமை அங்கீகரிக்கவில்லை. ஆனால் திபெத்தை அதன் ஒரு பகுதியாக நாம் கருதியபோது, சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக சீனா ஏற்றுக்கொண்டது,” என்று சாரி குறிப்பிட்டார். இதற்குப் பிறகுதான் நாதுலாவில் எல்லை வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுக்கும் அளவிற்கு நாதுலாவில் இருந்து வர்த்தகம் நடக்கவில்லை. இது ஒரு தற்காலிக முடிவு என்றும் பின்னர் நிலைமை மாறும் என்றும் அப்போது தோன்றியது. அந்த நேரத்தில் இந்தியா தலாய்லாமாவிடமும் பேசியது, அவரும் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்,” என்றார் அவர்.”திபெத் விஷயத்தில் இந்தியா மிகவும் மெத்தனமான கொள்கையைக் கொண்டுள்ளது. 1914 ஆம் ஆண்டில், சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் மக்மோஹன் கோடு பன்னாட்டு எல்லையாகக் கருதப்பட்டது. 1954 இல் நேரு ஒரு ஒப்பந்தத்தின் கீழ் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார்,” என்று ஜேஎன்யூவில் உள்ள சீன மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் பி.ஆர்.தீபக் குறிப்பிட்டார்.

“வாஜ்பாய்க்கும், நேருவுக்கும் வித்தியாசம் உள்ளது. நேரு எட்டு ஆண்டுகளுக்கு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கருதினார், ஆனால் வாஜ்பாய் எந்த கால வரம்பையும் நிர்ணயிக்கவில்லை” என்று பேராசிரியர் பி.ஆர்.தீபக் கூறுகிறார். “சீனாவுடனான நேருவின் திபெத் ஒப்பந்தம் 1962 மார்ச் மாதம் முடிவடைந்தது. இது 2003 வரை அப்படியே இருந்தது. வாஜ்பாய் 2003 இல் சீனாவுக்குச் சென்றபோது, அவர் திபெத் தொடர்பாக ஒப்பந்தம் செய்தார். சீனா மற்றும் திபெத் தொடர்பான இந்தியாவின் கொள்கை முரண்பாடுகள் நிறைந்தன. ஒருபுறம், இந்தியா மக்மோஹன் கோட்டை பன்னாட்டு எல்லையாக கருதுகிறது. மறுபுறம் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும் கருதுகிறது. இரண்டு விஷயங்களும் ஒன்றாக எப்படி நடக்க முடியும்? திபெத் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”

பிரதமர் மோடி தற்போது தலாய் லாமாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திபெத் விவகாரத்திலும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும் என்று பி.ஆர்.தீபக் கருதுகிறார்.இந்தியப் பகுதிகளில் சீன அத்துமீறலின் ஆரம்பம் 1950களின் மத்தியில் சீனாவால் தொடங்கப்பட்டது.1957 இல், அக்சாய் சின் வழியாக மேற்கில் 179 கிலோமீட்டர் நீள சாலையை சீனா அமைத்தது. அதே ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக்கில் உள்ள கொங்ககாவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 17 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என சீனா கூறியது.1962 இல் சீனா இந்தியா மீது நடத்திய தாக்குதல் இமயமலை பகுதிகள் மீதான கட்டுப்பாட்டை பெறவோ எல்லையை மாற்றவோ மட்டும் செய்யப்பட்ட ஒன்று அல்ல, அது நாகரீகங்களின் போர் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment