சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்


சென்னை, ஏப். 20- நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப் பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் (19.4.2023) கொண்டுவரப்பட்டது. 

மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.

பின்னர் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக பேரவையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன.

லூப் சாலையில் மீன் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத் தரவிட்டாலும் மீனவர் நலனுக் காக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள் ளார்.

மீனவர்களுடன் 4 மணி நேரம் பேசியுள்ளோம் என்றும் சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசா ரித்ததன் அடிப்படையில் எடுக்கப் பட்ட சிறிய அளவிலான நடவ டிக்கை இது எனவும், மீனவர்கள் தொடர்பான பிரச்சனை இன்று காலையோடு முடிவுக்கு வந்து விட்டது என்றும் அவர் கூறினார். 

முதலமைச்சரால் மீன்கடை பிரச்சினைக்கு நல்ல முடிவு காணப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment