உத்தரகண்டில் ‘புனித’ பயணத்தில் பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
டேராடூன், ஏப். 25- உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை என்கிற பெயரில் ‘புனித’ பயணத்தை பக்தர்கள் மேற் கொள்கின்றனராம். அப்பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே (22.4.2023) பக்தர்கள் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இரண்டு கோயில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த கனக் சிங்(வயது 62) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் படிதார் (வயது 49) ஆகிய இருவரும் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு அமர்நாத் பயணத்தின்போது 300 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment