வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அறிவிப்புகள்,
ஏப்ரல் முதல் தேதி வைக்கத்தில் - வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு தொடக்க விழாவை தொடங்கி வைத்துப் பேருரை-
நேற்று (3.4.2023) அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் நிறைவுரை-
மூன்று முத்தாய்ப்பு நடவடிக்கைகளை, உரைகளைப் பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இன்று (4.4.2023) காலை 9 மணியளவில் தொலைப்பேசியில் பேசி மகிழ்ந்து, நன்றி தெரிவித்தோம்!
முதலமைச்சர் அவர்களும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்!
வைக்கம் நூற்றாண்டு விழா, மிகச் சீரும் சிறப்புடன் தொடக்கமே, கேரள முதலமைச்சருடன் இணைந்து நடந்தது மிக நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.4.2023
No comments:
Post a Comment