திருநெல்வேலி, ஏப். 14- உச்சநீதி மன்ற அனுமதியை கொண்டு தமிழ்நாட்டில் மதப் பதற் றத்தை ஆர்எஸ்எஸ் தூண்டி விடும் அபாயம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.
திருநெல்வேலியில் 11.4.2023 அன்று அவர் செய் தியாளர்களிடம் கூறியதா வது:
தமிழ்நாட்டில் ஆர்எஸ் எஸ் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தி ருப்பது கவலை யளிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப் புக்கு ஒரே நேரத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருப்பது வருந்தத்தக் கது. ஆர்எஸ் எஸ் ஊர்வலங் களால் ஏற்படும் பதற்றமான சூழலை சமாளிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப் பது அவசியம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கி வரு கிறார். ஆளு நருக்கு எதிராக சட்டப்பேரவையில் திங்கட் கிழமை தீர்மானம் நிறைவேற் றப்பட்டதைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் இணைய வழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு கடந்த ஜன வரியிலேயே ஒப்புதல் வழங்கியி ருந்தால், 50 பேர் வரை உயிரிழந்திருக்க மாட் டார்கள். பலர் சொத் துகளை இழந்திருக்க மாட்டார் கள். சட்டப்பேரவையில் ஆளுந ருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோது, வேறு சில பிரச்சினை களை கார ணம் காட்டி எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர். அதே நேரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிவிட் டனர். இவர்கள் மாநில உரி மையைப் பற்றியோ, மக்களின் பிரச்சினைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை.
பல்வீர் சிங்கின் கொடிய செயல்
அம்பாசமுத்திரம் சரகத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
நெல்லை மாவட்டம், அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் காய மடைந்தனர். இந்த விபத்துக்கு விதிமீறலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததுமே காரணம். ஆனால், இப்போது அனைத்து குவாரிகளும் பழைய மாதிரி செயல்படு கிறது. ஒரே கிராமத்தில் 24 கல் குவாரிகள் செயல்படு கின்றன. கனிம கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு அனுமதி வாங்கி விட்டு 5 ஏக்கர்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கனிம கொள்ளையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி னால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். நெல்லை மாவட்டம், மானூரில் அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியானது சில ருடைய தலையீட்டால் பாதியி லேயே நிறுத்தப்பட்டுள்ளது. இப் போது வேறு இடத்தில் கட்ட முயற்சிக்கிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்த வேண் டும். அதே இடத்திலேயே கல்லூரியை கட்ட வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment