வடகுத்து, ஏப். 26- கடலூர் மாவட்டம், வடகுத்து, அண்ணா கிராமம், பெரியார் படிப்பகம் ஆசிரியர் வீரமணி நூலகம் விடுதலை வாச கர் வட்டம் சார்பில் 81 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 24.4.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் தலைமையில், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலை யில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா நடை பெற்றது.
கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வரவேற் புரை ஆற்றினார். திமுக தகவல் தொடர்பு ஒன்றிய பொறுப்பாளர் தர்மலிங் கம், கோவி கோபால கிருஷ்ணன், வடலூர் திராவிடர் கழக தலைவர் புலவர் ராவணன் ஆகி யோர் பேசிய பின் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் புரட்சிக் கவிஞ ரின் பாடல் வரிகளை சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம், சமூக நீதி, பெண் விடு தலை போன்ற தடங் களில் எடுத்து இயம்பி னார்.
தாய் மொழியான தமிழை உயிருக்கு சமமாக போற்றினார். தந்தை பெரியார் கொள்கை, எண் கவிதை, வடிவம், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் என்பதை தம் முடைய பேச்சில் குறிப் பிட்டார்.
நிகழ்வில் திராவிட மணி, கோபாலகிருஷ் ணன், முடப்புலி கலை மணி, நெய்வேலி பாவேந் தர் விரும்பி, வடலூர் இளங்கோ, வடலூர் பாஸ் கர், வடக்குத்து திராவி டன், வடக்குத்து அசோக் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment