கிருட்டினகிரி, ஏப். 16- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் தா.திருப்பதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி 14.4.2023 அன்று காலை 9.30 மணியளவில் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சார்பில் காவேரிப்பட்டணம் அன்பு ஆப் செட் அச்சகத்தில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் தலைமையில் சுயமரியாதைச் சுட ரொளி தா. திருப்பதியின் படத்திற்கு திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் கோ.திராவிட மணி, மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் இல.ஆறுமுகம், இளை ஞரணி துணைத்தலைவர் வே.புக ழேந்தி, ஒன்றிய அமைப்பாளர் சி. இராசா, சி.பி.அய். ஒன்றிய செயலாளர் க.சுரேசுபாபு, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அ. வெங்கடாசலம், அரசம்பட்டி சக்திவேல், காவேரிப்பட்டணம் நகர அமைப்பாளர் பூ. இராசேந் திரபாபு, அ.சரவணன், ச.பெரிய சாமி, செ.வீரபாண்டி, காவேரியப் பன் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment