பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு

சென்னை, ஏப். 4-  பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக் கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 6 முதல் 18 வய துடைய பள்ளி செல்லாத குழந்தை களை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட) கண்டறிய ஆண்டுதோறும் சிறப்பு கணக்கெ டுப்பு நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் வயதுக் கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். 

அதன்படி, வரும் கல்வியாண்டுக் கான (2023-2024) பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை ஏப்ரல் 2ஆவது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளில் ஆசிரி யர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், ஆசிரிய பயிற்றுநர்கள், தன் னார்வலர்கள், மேலாண்மைக் குழு  உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுப டாமல் வீடுவாரியாக கணக்கெடுக்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி செல்லாத குழந் தைகளின் எண்ணிக் கையை சரியாக பதிவு செய்வது அவசியம். பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியரின் தலைமை யில் பிற துறை அலுவலர் களுடன் கலந்தாலோ சனை கூட்டம் நடத்தி திட்டமிட வேண்டும். கணக்கெடுப்பின்போது கரோனா தொற்றுக் காரணமாக பெற்றோர் களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர் களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

கணக்கெடுப்பின்போது கண்ட றியப்படும் 6 முதல் 18 வயதுடைய குழந்தைகளை, அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment