17 உயிர்பலிகளை வாங்கிய பிறகு பகலில் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாதாம் மராட்டிய அரசு உத்தரவு
மும்பை, ஏப் 21 மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சி களையும் நடத்தக்கூடாது என அந்த மாநில அரசு உத்தரவிட் டுள்ளது.
மராட்டிய மாநிலம் நவி மும்பையில், சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 17 பேர் உயிரி ழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மராட் டியத்தில் வெப்ப அலை காரண மாக பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சி களையும் நடத் தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட் டுள்ளது. வானிலையின் தாக்கம் மேம்பட்ட பிறகே, இந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என்று தெரி விக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment