ஒசூர்,ஏப்.11- ஒசூர் உள்வட்ட சாலையில் இணையும் வஉசி நகர்,முனிஸ்வர் நகர் சந்திப்பு பகுதிக்கு பெரியார் சதுக்கம் என்று பெயரிட காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒசூர் மேயர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதுடன், காலதாமதம் செய்யாமல் பெரியார் சதுக்கம் பெயர் பலகையை திறந்திட வேண்டியும், பெரியார் சதுக்கம் பெயரிடும் இடத்தில் அதன் தனித்தன்மை சிதையும் வகையில் வேறு அடையாளங்களோ, பெயர்களோ வைத்திட அனுமதிக்க கூடாது என்று அனைத்து கட்சியினர் கோரியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.இராமசந்திரன், சிபிஎம் கட்சி ஒசூர் ஒன்றிய தலைவர் ஜி.பி.ஜெயராமன், சிபிஅய் கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.மாதையன், கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மதிமுக நகர செயலாளர் ஈழம்குமரேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜுபைர், மக்கள் அதிகாரம் சங்கர்,எஸ்டிபிஅய் கட்சி மாவட்ட தலைவர் ஷாநவாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சி.சபரி, தமிழியக்கம் தென்மாநில அமைப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி, தீண்டாமை ஒழிப்பு முன்ணனி மாவட்ட செயலாளர் நாகேஷ்பாபு, மனிதநேய ஜனநாய கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஒசூர் நவுசாத், மே17 இயக்கம் மோகன்ராஜ் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ரம்மியா, தமிழ்தேச குடியரசு இயக்க மாவட்ட செயலாளர் விக்னேஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் ஆகியோர் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் ஆகியோரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தலைமையில் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், செயலாளர் சின்னசாமி, அய்என்டியூசி செல்வம் காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஆரிஃப் வழங்கினர்.
No comments:
Post a Comment