வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்

மைசூரு, ஏப்.19 வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.   கருநாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா போட்டியிடு கிறார். வருணா தொகுதி முக்கிய தொகுதியாக மாறி உள்ளது. அவர்கள் வருணா தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் வீட்டு வசதிதுறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் அமைச்சர் வி.சோ மண்ணாவிடம் கேள்வி எழுப்பினர். இதனை சிலர் காட்சிப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது வி.சோமண்ணா காட்சிப் பதிவு மேற்கொள்வதை தடுக்க முயன்றது போன்ற காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.


No comments:

Post a Comment