தொழில் வளர்ச்சிக்கான சேவை ஏற்றுமதி துறைக்கு வருவாய் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

தொழில் வளர்ச்சிக்கான சேவை ஏற்றுமதி துறைக்கு வருவாய் அதிகரிப்பு

சென்னை, ஏப். 19- இந்திய சேவைத் துறைக்குக் கடந்த நிதியாண்டு சாதனை படைத்த ஒன்றாக மாறியுள்ளது என்பதை அறிவிப்பதில் சேவை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (ஷிணிறிசி) மகிழ்ச்சி அடைகிறது. கடந்த நிதி யாண்டில் 300 பில்லியன் டாலர் என்கிற இலக்கைவிட அதிகமாக - 322.72 பில்லியன் டாலர் வருவாயை சேவைத் துறை ஈட்டியுள்ளது.

“சேவை மற்றும் வணிகம் சார்ந்த பொருட்கள் துறையைப் பற்றி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் முன்னறிவித்தது, தற்போது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி யடைகிறோம்! இந்தத் துறைகள் மிகச் சிறப்பாக வளர்ந்து வருகின்றன. இலக்குகளை அடை வதற்கு மட்டுமல்லாமல் சிறப்பாகச் செயல்படு வதற்கும் அரசாங்கம், எஸ்.இ.பி.சி. மற்றும் தொழில் துறைகள் தீவிர மாகச் செயல்பட்டு வருகின்றன.

பொருளாதாரம் வளர்ந்து வருகிறது, அத்துடன் சேவைத் துறைக்கு இது ஒரு வெற்றி கரமான ஆண்டும்கூட. 2024-ஆம் நிதியாண்டில் இதை மேம்படுத்தவும் கூடுதலாக வளரவும் நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று 2006-இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் உருவாக்கிய எஸ்.இ.பி.சி. அமைப்பின் தலைவர் சுனில் எச். தலால்டி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment