இந்திய வரலாற்று காங்கிரஸ் (Indian History Congress ) சமீபத்திய அறிக்கையில் - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) தனது புதிய பாடத் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தி, மாற்றி அமைத்துள்ளதை கண்டித்தும், இச்செயலுக்கு எதி ராக வரலாற்று அறிஞர்கள் குரல் எழுப்ப வேண்டு மென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
(ஆதாரம் : 'தி இந்து' - 11.04.2023)
ஆர்.எஸ்.எஸ். சங்கிகளின் முக்கியமான திட்டமே - வரலாற்றைத் திருத்தி தங்களது ஆரிய பார்ப்பனிய நலனுக்கு ஏற்றவாறு எழுதி வைத்து விட வேண்டும் என்ற மாஸ்டர் பிளான் தான். அதற்காக அவர்கள் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் !
அவ்வாறு செய்ய தீர்மானித்திருக்கும் வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ள திருத்தங்களை / திரிபுகளை படித்தறியுங்கள் :
1) இந்திய நாடு ஆரியர்களின் தாய் நாடு என்ற பெருமையைக் கொண்டதாகும் -
இந்த திருத்தத்தின் மூலம், 'ஆரியர்கள் வந்தேறிகள் ' என்ற வரலாற்று உண்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதும், திராவிடர்களின் சிந்து வெளி நாகரிக வரலாற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றி வைத்து ' சரஸ்வதி நாகரிகம் ' என அழைத்துக் கொள்ள செய்வதுமாகும் !
2) பண்டைய இந்திய (Ancient History) வரலாற்றிலிருந்து ஜாதி அமைப்பு பற்றிய தகவல்களை நீக்கி விடுவது - இதன் மூலம் ஜாதியை இன்று வரை கட்டிக் காத்து வரும் பண்டைய மனுதர்ம சாஸ்திரத்தின் மேலுள்ள எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்வதாகும் !
3) இந்தியாவில் ஜாதி அமைப்புகள் இங்கே இஸ்லாம் மதம் வந்த பின்பு தான் உருவானதாக சித்தரிப்பது - இந்த வரலாற்று திரிபு மூலம் ஜாதி சண்டைகளுக்கு காரணம் இஸ்லாம் என பதிய வைத்து அதனால் மதச் சண்டைகளுக்கு வழி வகுப்பதாகும் !
4) முகலாயப் பேரரசர் அக்பரின் மத நல்லிணக்கம் பற்றிய தகவல்களை நீக்கி விடுவது -
இதனால் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கலாச்சார, பண்பாட்டு ஒற்றுமைகளையும் முன்னேற்றங்களையும் மாணவர்களிடம் இருட் டடிப்பு செய்வதாகும் !
5) காந்தியார் கொலை சம்பந்தமான நிகழ்வுகளை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் (tக்ஷீவீயீறீமீபீ) பதிவிடுவது -
இதன் உள் நோக்கம் காந்தியாரின் கொலை தவிர்க்க முடியாத ஒன்று போலவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை துதி பாடுவதும் சகஜமானது தான் என்ற நிலைப் பாட்டை எடுப்பதுமாகும் !
வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தும் திருடர்களை, இப்படிப்பட்ட திரிபுகளைச் செய்யும் திருந்தாத திருடர்களை அடையாளம் கண்டு மக்களிடம் தெரி விக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் !
வரலாறு மிகவும் முக்கியமென அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு நமக்கும் தெரிய வேண்டுமல்லவா?
- பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்
No comments:
Post a Comment