ஜனநாயகத்தை யாராலும் - எந்த சக்தியாலும் அழிக்க முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

ஜனநாயகத்தை யாராலும் - எந்த சக்தியாலும் அழிக்க முடியாது

பசவண்ணா விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி கருத்து

பெங்களூரு, ஏப்.24 பார்ப்பனர் எதிர்ப் பாளர் பசவண்ணா ஏற்படுத்திய ஜன நாயகத்தை யாராலும் - எந்த சக்தியாலும் அழிக்க முடியாது  என்று ராகுல் காந்தி கூறினார்.

உத்சவ சமிதி அமைப்பு சார்பில் பசவ ஜெயந்தி பாகல்கோட்டை மாவட்டம் கூடலசங்கமாவில் நேற்று (23.4.2023) நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

‘பசவ ஜெயந்தி' அன்று நான் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை இங்கே அழைத்து உபசரிப்பு வழங்கியுள்ளீர்கள். அதற்காக நன்றி தெரி விக்கிறேன். பசவண்ணா ஜனநாயகத்தை இந்தியாவுக்கும், உலகிற்கும் அறிமுகம் செய்தார். இது உண்மை. இந்த ஜன நாயகத்தை யாராலும் அழிக்க முடியாது. நாடாளுமன்றம், ஆட்சி அதிகார முறை வந்துள்ளது. நமது ஜனநாயகத்தில் பச வண்ணரின் கொள்கைகள் அடங்கியுள் ளன. உங்களிடம் இருள் சூழ்ந்திருந்தால், அதை அகற்ற எங்கோ ஓரிடத்தில் இருந்து விளக்கு எரியும். அதே போல் சமுதாயத்தில் இருள் சூழ்ந்தபோது பசவண்ணா விளக் காக தோன்றினார். தனிப்பட்ட நபர்கள் வெளிச்சத்தைக் கொடுக்க மாட்டார்கள். பிறரைப் பார்த்து கேள்வி கேட்பது எளிது. ஆனால் பசவண்ணா, முதலில் தன்னிடம் கேள்வி கேட்டு கொள்வார். இது மிகப்பெரிய ஒரு விஷயம்.

பசவண்ணா 8 வயதாக இருந்தபோது, அவருக்கு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தனர். அந்த நண்பர் ஒருவர்மீது தாக்குதல் நடந்தபோது, எதற் காக அவரை தாக்குகிறார்கள் என்று பசவண்ணா தனக்குத்தானே கேள்வி கேட்டுகொண்டதாக இங்குள்ள மடாதிபதி கூறினார். சிறு வயதிலேயே இந்த ஒரு ‘ஞானம்' அவருக்கு எப்படி என்று மடாதி பதியிடம் கேட்டேன். பசவண்ணா தனது வாழ்நாள் முழுவதும், இந்த ஜாதி முறை, விரோதம் மற்றும் ஜனநாயகம் குறித்து தனக்குத்தானே கேள்வி கேட்டு கொண் டார். அதன் பிறகு தனது மனதில் தோன்றிய விசயத்தை தனது வாழ்நாள் முழுவதும் பசவண்ணா பின்பற்றினார். இன்று பலர் கேள்வி கேட்கிறார்கள். உண் மையை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் அறிந்த உண்மையை சமுதாயத்தில் கூறத் தயங்குகிறார்கள். பெரும்பாலானோருக்கு உண்மைகள் தெரியும். ஆனாலும், அந்த உண்மை குறித்து குரல் எழுப்புவது இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் பயப்படு கிறார்கள். ஆனால் பசவண்ணா தான் அறிந்த உண்மையை பயப்படாமல் சமு தாயத்தில் கூறினார். அதனால் தான் அவர் மற்றவர்களை விட தனித்துக் காணப் பட்டார். இந்த சமுதாயத்தில் உண்மையை பேசுவது சுலபமான விஷயமல்ல.

இன்று பசவண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து நாம் மரியாதை செலுத்துகிறோம். ஆனால், அவர் சமுதாயத்தில் உண்மையைப் பேசும்போது அவர் மீது தாக்குதல் நடந்திருக்கும். அவர்களை மிரட்டி இருப்பார்கள். ஆனால் அவற்றுக்கு எல்லாம் அவர் பயப்படாமல் உண்மையின் பாதையில் பயணித்தார். உண்மையை பேச பயந்து கொண்டு நாம் விலகி சென்றால், நமக்கான மரியாதை கிடைக்காது. இங்கு நான் பல்வேறு விசயங்களை கற்று கொண்டேன். பசவண்ணா குறித்து நான் புத்தகங்களில் படித்து அறிந்து கொண்டுள்ளேன். அவ ரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாக உள்ளன. பசவண்ணா, ‘என்றைக்கும் பயப்பட வேண்டாம், உண்மையின் பாதையில் பயணிக்க வேண்டும், மற்ற வர்களை மதிக்க வேண்டும்' என்று நமக்கு வழிகாட்டியுள்ளார். இந்த விஷயம் குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே அவரது கொள்கையை பின்பற்று கிறார்கள். - இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment