கே: துக்ளக், தமிழ்மொழி வளர்ச்சிக்காக இதுவரை ஆற்றியுள்ள பணிகள் என்ன?
ப: தமிழையும், தமிழர்களையும், தமிழ்ப் புலவர்களை யும் பேசத்தகாத வார்த்தைகளில் பழித்த ஈ.வெ.ரா.வை தொடர்ந்து அம்பலப் படுத்தி தமிழ், தமிழர்கள், தமிழ் மண்ணின் மானத்தைக் காப்பாற்றி வருகிறது துக்ளக். அப்படி அவர் தமிழைப் பழித்ததை மூடி மறைத்து, அவரை தந்தை பெரியார். என்றும், சமூக நீதியாளர் என்றும், தமிழ் மண் அவர் மண் என்றும் போற்றும் அவரது சீடர்களின் முகத்திரையையும் தொடர்ந்து கிழித்து வருகிறது துக்ளக். யாரும் செய்யத் துணியாத இந்தச் சேவையை விடாமல் செய்து, தமிழ் வளர்ச்சிக்கு யாரும் ஆற்றாத பணிகளை துக்ளக் செய்து வருகிறது. இதைவிடத் தலை யாய தமிழ் வளர்ச்சிப் பணி என்ன இருக்க முடியும் என்று கூறுங்கள்.
அப்படியா ‘துக்ளக்'கே? தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நீ பின்பற்றுகிறாயே - அது எப்படி?
திருமணங்களில் சமஸ்கிருத மந்திரங்களை ஓதி நடைபெற்று வந்ததே - இப்பொழுது சுயமரியாதைத் திருமணம் சட்ட ரீதியாக ஆக்கப்பட்டு தமிழில் விழா நடக்கிறதே?, அது யார் செய்த தொண்டு?
கோவிலில் தமிழ் வழிபாடு என்பது எல்லாம் எப்படி வந்தது?
தமிழைப் போற்றி உங்கள் கூட்டம் எப்படி எப்படி எல்லாம் இழிவுபடுத்தியது?
துக்ளக் - தினமலர் கும்பல்
ஆற்றிய தமிழ்பணியோ தமிழ்ப்பணி!
இன்றைக்கும் என்ன எழுதுகிறார்கள்?
கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.
(‘தினமலர்', வாரமலர் 13.6.2004)
தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத் திற்குக் கர்நாடகா ஆண் டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப் படும். கர்நாடக அரசு குறித்த நேரத்தில் தண் ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமத மாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.
டவுட் தனபாலு: அதனால என்னங்க பெங்களூருல திருவள்ளுவர். சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன?
(‘தினமலர்' 18.8.2009)
கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல் அமைச்சர்?
பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான். (கல்கி 27.1.2008)
தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத் திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோத மானது.
(‘துக்ளக்', 27.1.2010)
கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி யுள்ளாரே!
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாரா வது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து. அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே!
(‘துக்ளக்' 19.8.2009)
தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம்.
(‘துக்ளக்' 23.6.2010)
கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?
பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு. கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலை ஞர் ரெடி தமிழகம் ரெடி தமிழ் ரெடியா?
(‘துக்ளக்' 4.8.2010)
கேள்வி: உலகத் தமிழ் மாநாடு என்பது எதற்காக நடத்தப்படுகிறது?
பதில்: இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் எதற்காக நடத்தப் பட்டன? அவை என்ன சாதித்தன? அதனால் தமிழ் மொழிக்குக் கிட்டிய சிறப்புகள் என்னென்ன? என்பதை யெல்லாம் கண்டுபிடியுங்கள். அதைக் கண்டு பிடித்தபின், அதே பயன்களுக்காகத்தான் இந்த மாநாடும் நடத்தப்படுகிறது என்பது உங்களுக் குப் புரியவரும்.
(‘துக்ளக்' 14.10.2009)
தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வா கத்தில் புகுந்து குட்டிச் சுவராக்கும் இவர்களை மொழி நக்சலைட்டுகள் என்றுதான் கருத வேண்டும்... முதல்வரே தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால். சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பிவிடுகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இதுபோல், நடைமுறைக்கு ஒவ் வாத மொழிவெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழி வெறியைத் தங்கள் அதிகாரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும் தீவிரவாதிகள்தான். இவர்கள் மொழி நக் சலைட்டுகள்.
(‘துக்ளக்' 15.9.2010)
தமிழ்மீது காழ்ப்பும் இழிவான மனப்பான் மையும் எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா?
கடைசியாக ஒன்று உங்கள் பெரியவாள் பூஜை வேளையில் "நீஷப்பாஷை"யில் பேச மாட்டாராமே, அதன் பொருள் என்ன?
No comments:
Post a Comment