மோடி அரசின் நோக்கம் என்ன? தனது நண்பர்களுக்கு பயன் அளிப்பதே - ராகுல்காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

மோடி அரசின் நோக்கம் என்ன? தனது நண்பர்களுக்கு பயன் அளிப்பதே - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.15-- பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே ஒன்றிய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் டுவிட்ட ரில் வெளியிட்ட பதிவில் ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசால், பிரத மர் மோடியின் நண்பர்களே பலன் அடைவதாக சாடி உள்ளார். அந் தப் பதிவில் அவர் கூறி இருப்ப தாவது:-

நாட்டில் ஏழை மக்களின் வரு மானம் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பணக்காரர்களின் வருமானம் 40 சதவீதம் அதிகரித் துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வருமானமோ 10 சதவீதம் சரிந்து உள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன் றவை பொதுமக்களை எவ்வளவு துன்பப்படுத்தினாலும் 'சூட்-பூட்' அரசின் ஒரே இலக்கு (பிரதமர் மோடியின்) நண்பர்களின் கஜா னாவை நிரப்புவது மட்டும்தான் என்று அவர் கூறி உள்ளார்.

இந்தப் பதிவுடன், "ஏழை, ஏழைதான், பணக்காரர், பணக்காரர்தான்" என்ற தலைப் பிலான 'கிராபிக்' புள்ளி விவரத் தையும் இணைத்துள்ளார். இது, 2016-2021ஆம் ஆண்டுகளின், வரு மான வளர்ச்சியைக் காட்டுகிறது.

கவுதம் அதானி போன்ற சில குறிப்பிட்ட பணக்கார தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி சாதகமாக நடந்து வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும், 2 இந்தியாக்கள் இருப்பதாகவும், ஒன்று பணக்கா ரர்களுக்கானது, மற்றொன்று ஏழை களுக்கானது என்று தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment