புதுடில்லி, ஏப்.21 உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலமும் வழங்காத கவுரவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்_கின் மனைவி சீதாகுமாரியும் அவரது புதல்வர்களும் டில்லியில் நேற்று (20.4.2023) தெரிவித்தனர்.
மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பையொட்டி டில்லியில் தீன் மூர்த்தி மார்க்கில் குடியிருக்கும் வி.பி.சிங்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
துணைவியார் சீதாகுமாரி
அப்போது வி.பி. சிங்கின் துணைவியார் சீதாகுமாரி செய்தியாளர் களிடம் பேசி னார். அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச் சியை அளிக்கிறது. அவருக்கு நன் றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் ஆண்டுதோறும் பாலாஜி கோவிலுக்கு போகும்போதெல்லாம் சென்னைக்கு போவதுண்டு. சமீபத் தில் கூட சென்றேன். இந்த சிலை வைக்கப்பட்ட பின்னர் எனது ஆயுள் இருக்கும் பட்சத்தில் சென்னைக்கு சென்று பார்ப்பேன். மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் டில்லி வரும்போதெல்லாம் எனது கணவரை சந்திக்க வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்கள். ஒரு முறை எனது கணவர் எங்கள் வீட்டில் இருந்த நாயை ஓவியமாக வரைந்திருந்தார். வீட்டிற்கு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் இந்த நாய் ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறி எடுத்துக்கொண்டார். இது போன்ற நினைவுகள் ஏராளமாக உள்ளன. மறைந்த தலைவரான எனது கணவருக்கு எந்த மாநிலமும் சிலை வைக்க முன்வரவில்லை. அவர் பிறந்த உ.பி. மாநிலத்தில் கூட சிலை நிறுவப்படவில்லை என்கிற வருத்தமான நிலையில் முதன் முதலில் சிலையை வைக்கப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அறிவிப்பை செய்துள்ளார் '' என்றார்
மகன் அஜய்சிங்
தொடர்ந்து வி.பி. சிங்கின் மகன் அஜய்சிங் பேசுகையில், ‘நீண்ட ஆண்டுகள் நிலுவையில் இருந்த மண்டல் ஆணைய அறிக்கையை அமல்படுத்துவதில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தடங்கல், போராட்டங்களை கடந்து எங்கள் தந்தை தலைமையிலான ஒன்றிய அரசு அதை எடுத்துக்கொண்டு அமல்படுத்தியது. எனது தந்தையும், மறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரும் நல்ல நண்பர்கள் மட்டு மல்ல, இருவரும் ஒரே விதமான கொள்கையுடையவர்கள். நான் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறுகின்றேன். நம்முடைய தந்தையர்களைப் போன்று _அவர்கள் கொண்ட கொள்கை உறுதியுடன் பின்பற்றி அதில் தொடர்ந்து போராட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு என் தந்தையைப்பற்றி சில விவரங்களைக் கூறவேண்டும். இதுவெல்லாம் தமிழ்நாட்டிற்குக் கூட தெரியாமல் இருக்கலாம். அவர் அரச குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஏராளமான நிலங்கள் இருந்தன. அவர் இளமையாக இருக்கும்போது அதுவும் என்னுடைய இளம் சகோதரர் பிறக்கும் முன்பு அந்த நிலங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார். அவர் ஓட்டுக்காக வழங்கவில்லை. ஏழைகளை முன்னேற்றுவதற்காக அரசியலுக்கு வருவதற்கு முன்பே வழங்கினார். அவர் அரசியலுக்கு வந்து உயர் அதிகாரத்தை பெற்ற பின்னர், அதுவரை டாக்டர் அம்பேத்கரை யாரும் கவுரவிக்காத நிலையில் "பாரத் ரத்னா" விருது அவர் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, நாடாளுமன்றத் தில் படத் திறப்பு, பிறந்த நாளில் அரசு விடுமுறை போன்றவற்றையும் வழங்கி அம்பேத்கரை கவரவித்தார். இதே போன்று சிறுபான்மையினரின் நலனில் அக்கறை செலுத்தி "மிலாது நபி" தினத்தை அரசு விடு முறையாக அறிவித்தார். பல்வேறு எதிர்ப்புகளை மீறி மண்டல் ஆணைய அறிக்கையை அமல் படுத்தி ஆட்சியையும் இழந்தார். இதுவெல்லாம் கீழ்மட்டத்தில் இருப்பவர்களை உயர்த்துவதற்கான பணிகள் _ அதை மேற்கொண்டார். இதனால் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்வதுசிலையை திறந்திருப்பதோடு, நமது தந்தை களை போன்று _ 'சமூகத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்காக' தொடர்ந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
பேத்திகள்
மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற் றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வி.பி.சிங்கின் பேத்திகள் நன்றி தெரிவித்தனர்.
தேசிய முன்னணியை உரு வாக்கி 1989ஆ-ம் ஆண்டு இந்தி யாவின் பிரதமரானார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும், அவரது சாதனைகள் மகத்தானவை. அப்படிப்பட்ட நல்ல மனிதரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் வி.பி.சிங்கின் முழு உருவ கம்பீரச் சிலை அமைக் கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.4.2023) அறிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு வி.பி.சிங்கின் பேத்திகளான அத்ரிஜா மஞ்சரி சிங் மற்றும் ரிச்சா மஞ்சரி சிங் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்து காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சமூக நீதி நாயகரான எங்களது தாத்தா வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைப்பதாக தமிழ் நாடு சட்டப்பேரவையில் முதல மைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது தாத்தாவை பெருமைப்படுத்தி இப்படியொரு அறிவிப்பை கொடுத்திருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வி.பி.சிங்கின் பேத்திகள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்ட காட்சிப் பதிவை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தக் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment