கந்தர்வகோட்டை: நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு ஏற்பட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

கந்தர்வகோட்டை: நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு ஏற்பட்டது!

கந்தர்வகோட்டை, ஏப்.19 புதுக் கோட்டை மாவட்டம்  கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு கடந்த 17 ஆம் நாள் பகல் 12.13 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை அரசு உயர் நிலைப்பள்ளி வெள்ளாள விடுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கள் அக்கச்சிப்பட்டி, கந்தர்வ கோட்டை மட்டங்கால், வேம்பன் பட்டி, காட்டுநாவல், தொடக்கப் பள்ளி தெற்கு வாண்டான்விடுதி (தெற்கு) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கண்டுகளித் தனர். 

கந்தர்வகோட்டை பகுதிகளில் ஏற்பட்ட நிழல் இல்லா நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசும் போது, ‘‘நிழல் என்பது நம்மை எந்நாளும் பின் தொடரும்  அறி வியல் நிகழ்வு. இந்த நிழல் இல்லா நாள் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டும் ஒரு சில மணித்துளிகளுக்கு நம்மை பின் தொடராது. அந்த நாளை தான் நாம் நிழல் இல்லாத நாள் என் கிறோம்.   இந்த அறிவியல் நிகழ்வு கந்தர்வகோட்டை பகுதிகளில் இன்று சரியாக 12.13 மணியளவில் ஏற்பட்டது'' என்றார் அவர்.

 நிழல் இல்லாத நாள்

சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங் குத்தாக நம்மீது படும். அப்போது நிழல் நமது கால்களுக்கு அடியில் படும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நாம் கண்களுக்குத் தெரியாது அந்த நாளைத்தான் நிழல் இல்லா நாள் - சுழிய  நிழல் நாள் என்று அழைக் கிறோம்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரச்சார கந்தர்வகோட்டை குழுவின் சார்பில், மாவட்ட இணைச் செயலாளர் துரை யரசன்,  வட்டார செயலாளர் சின்ன ராஜா பொருளாளர் கண்ணன் ஆகி யோர் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் அரசு உயர்நிலைப் பள்ளி வெள்ளாவிடுதி தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துராமன், அறிவியல் ஆசிரியர் யோகவேல், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கந்தர்வகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆசிரியர்கள் மணிமேகலை,சிந்தியா, தனலெட்சுமி, ஜாய்ஸ் ராணி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment