தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சென்னை, ஏப். 15- திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியது தொடர்பாக அண்ணாமலை மீது சட்டப்படி வழக்கு தொட ரப்படும் என்று திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
திமுக தொடர்பான சொத் துப்பட்டியல் என்று சில விவ ரங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (14.4.2023) வெளியிட்டார்.
இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவால யத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட் டையும் ஆதாரத்துடன் தெரி விக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை எப்படி காவல் துறையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் வருகிறது. அவர் குற்றச்சாட்டு தெரிவித் துள்ள அனைவருமே தேர்த லில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடும் போது வேட்பாளர்கள் சொத் துக் கணக்கை தெரிவிக்க வேண் டும் என்பது கட்டாயம். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள் ளிட்ட எல்லோரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள னர். அதில் தெரிவிக்கப்பட்ட சொத்து தொடர்பாக விதி மீறல் இருந்தால், சாதாரண வாக்காளர்கூட தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாம்.
அண்ணாமலை யார் யார் மீது குற்றம்சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள். இனி மேல், பாஜகவுக்காக சுற்றுப் பயணம் செய்வதைவிட, நீதி மன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருக்கும். அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள் மீது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூற தைரியம் இருக்கிறதா என்று நான் கேட்கிறேன். ரபேல் கடிகாரம் தொடர்பாக, ரசீதுக்கு பதில் சீட்டு காட்டுகிறார். பணம் கட்டி வாங்கினால் பில் தரு வார்கள். ஆனால், அவர் சீட் டைதான் காட்டினார்.
அவர் கூறியுள்ள குற்றச் சாட்டுகள் மீதெல்லாம் நட வடிக்கை எடுக்க வேண்டிய வருமான வரித் துறை, அம லாக்கத் துறை பிரதமர் மோடி யின் கையில் உள்ளது. ஆக, அவர் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுகிறாரா அல்லது, இந்த அமைப்புகளை வைத்துள்ள மோடி அல்லது நிர்மலா சீதாராமனை விமர்சிக்கிறாரா என்பது தெரியவில்லை. திமுக இதுபோன்ற பல குற்றச்சாட் டுகளை சந்தித்துள்ளது. 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு ஊழல் குற்றச்சாட்டை யாவது, சொன்னவர்கள் நிரூ பித்துள்ளார்களா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால்கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. எம்ஜிஆர், ஜெய லலிதாவைவிட அண்ணா மலை ஒன்றும் அறிவுலக மேதையோ, ஆளுமைத்திறன் உள்ளவரோ இல்லை. ரூ.3,418 கோடி மதிப்பில் பள்ளிகள் உள்ளதாகவும் ரூ.34,184.71 கோடியில் கல்லூரிகள், பல் கலைக்கழகங்கள் உள்ளதாக வும் தெரிவித்துள்ளார். இவற் றுக்கான ஆவணங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.
ஏழை மக்கள் ஆருத்ரா நிறு வனத்தில் முதலீடு செய்துவிட்டு வயிற்றெரிச்சலுடன் கமலால யத்துக்கு சென்று மறியல் செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி பணம் ரூ.2,000 கோடியில் ரூ.84 கோடியை அண்ணாமலையும், அவரது சகாக்களும் பெற்றுள்ளதாக பொதுமக்கள், கட்சியினர் கூறி வருகின்றனர். தேசிய அளவி லும், மாநில அளவிலும் உள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப, இன்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நாங்கள் குறிப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, ஜெயலலிதா உள் ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தோம். அவற்றை நிரூபித்து, தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகியுள்ளார். அவரை களங் கப்படுத்த நினைத்தால் எண் ணம் ஈடேறாது. சிபிஅய் விசாரணைக்கெல்லாம் பயப் பட மாட்டோம். இதே சிபிஅய் தானே ராசா மீது வழக்கு போட்டது. அந்த வழக்கை சந்தித்து வெற்றி பெற்றோம். நாங்கள் ஒன்றும் பழனி சாமியோ, வேலுமணியோ இல்லை. பட்டியல் வெளியிடு வதாக அவர்களையும் அண் ணாமலை பயமுறுத்துகிறார். எவ்வளவு ‘டீல்’ பேசுவார் என் பது தெரியவில்லை. ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை நிச் சயமாக உள்ளே போகப் போகிறார். திமுக சொத்து தொடர்பாக, முதலமைச்சர் அனுமதியுடன் வழக்கு தொடர் வேன். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள் பதிலடி
அமைச்சர் துரைமுருகன்
திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அர சியலுக்காக வெளியிட்டுள் ளார் என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என் றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு ஊதியம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம். நண்பர் ஒருவர் ஒரு நாள் உதவலாம், ஒரு வாரம் உதவலாம், ஒரு மாதம் உதவலாம். ஆண்டுக் கணக்கில் யாராவது உதவி செய்வார்களா? அப்படி யாரா வது இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.
நான் தேர்தலில் போட்டியிட்டால், எனக்காக நண்பர் கள், உறவினர்கள் யார் செலவு செய்தாலும் அது என்னுடைய கணக்கில்தான் வரும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத் தரவு. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு என்னுடைய செலவுகளை எல்லாம் யாரோ செய்கிறார் கள் என்றால், அது எங்கே வார் ரூமில் இருந்து வருகிறதா? வார் ரூமில் இருந்து வரும் வசூல்தான் நண்பரா?
அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ள எங்கள் கட்சி யைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில், வேட்புமனுவில் தங்களது குடும்ப சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். செய்தி யாளர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறும் அண்ணாமலை, அவர் சொல்ல வருவதை ஒரு காட்சிப் பதிவாக பதிவு செய்து, அனைத்து ஊடக அலுவலகங்களுக்கும் அனுப்பினால் ஊடகவியலா ளர்கள் எடுத்துக்கொள்ள போகின்றனர். வாட்ச் வாங் கியதாக ஒருவர் பெயரை சொல்கிறார். அவர் வாங்கியது 4.50 லட்சம். அந்த நபர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து அண்ணா மலைக்கு 3 லட்சத்துக்கு விற் பனை செய்கிறார். கிடைப்ப தற்கு அரிதான ஒரு பொருள் காலங்கள் செல்ல செல்ல அதன் மதிப்பு அதிகமாகும். அப்படியிருக்கும்போது எப்படி இரண்டு மாதத்துக்குள் இவருக்கு விலை குறைத்து கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, அந்த வாட்ச் பற்றி சொல்லும்போது ஒரு இடத்தில் 147 என்கிறார், ஒரு இடத்தில் 149 என்கிறார்.
அதாவது ஒரு பொய்யை மறைப்பதற்கு, ஒரு வெகுமதியை மறைப்பதற்கு தான் வாங்கிய ஒரு லஞ்சத்தை மறைப்பதற்கு நூறு பொய், ஆயிரம் பொய்யை சொல்ல ஆரம்பித்துவிட்டார். வாட்ச் பரிசுப் பொருளாக கிடைத்தது என்று கூறுவதில் அண்ணாமலைக்கு என்ன வெட்கம். தேசிய கட்சியில் இருக்கிற ஒரே காரணத்திற்காக, எந்தவித அடிப்படை முகாந் திரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்" என்று செந்தில்பாலாஜி கூறினார்.
அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறிய போது, ‘‘தமிழ்நாடு அமைச் சர்கள் மீதான ஊழல் பட்டி யலை அண்ணாமலை வெளியிடுவதால் எங்களுக்கு கவலை இல்லை. மடியில் கனம் இல்லா ததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந் திக்க தயாராக உள்ளனர்’’ என்றார்
கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறும் போது, ‘‘சிலர் அரசியலில் தங் களது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக தவறான விஷ யங்களைப் பேசி வருகின்றனர். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.
No comments:
Post a Comment