'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ச.மணிவண்ணன், தலைவர், துறையூர் கழக மாவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ச.மணிவண்ணன், தலைவர், துறையூர் கழக மாவட்டம்

ஆரியத்தை

வீரியமிழக்கச்செய்தது

கருப்புச் சட்டை!

அனைவரும் சமமென்பது

கருப்புச் சட்டை!

கல்வி பெறச் செய்தது

கருப்புச் சட்டை!

உரிமை பெறச் செய்தது

கருப்புச் சட்டை!

உண்மையைச் சொல்வது

கருப்புச் சட்டை!

மாடு மேய்த்தவனை

மலம் அள்ளியவனை

பறை அடித்தவனை

பாடை சுமந்தவனை

செருப்பு தைத்தவனை

அடிமை வேலை செய்தவனை

மனிதனாக்கியது

கருப்புச் சட்டை!

ஜாதி, மதம் ஒழித்தது

கருப்புச் சட்டை!

சாத்திர சாக்கடையை

முடைநாற்ற மூடநம்பிக்கையை

வேரறுத்தது

கருப்புச் சட்டை!

31-சி சட்டம் தந்தது

கருப்புச் சட்டை!

சமத்துவம் மலரச் செய்தது

கருப்புச் சட்டை!

பெரியாரின் அடையாளம்

கருப்புச் சட்டை!

பெருமையும் அணியும் சின்னம்

கருப்புச் சட்டை!

90 வயதினிலும்

தொண்டு செய்யும்

வீரமணி!

தொடர்பணி ஆற்றிடும்

வீரமணி!

ஆரியத்தை வீழ்த்திய

வீரமணி!

அண்ட முடியாத பெருநெருப்பு

வீரமணி!

‘தினமலர்' தீயசக்தியே

அடக்கு உன் நாவை!

அந்துமணி அய்யர்வாளே

அடங்கிடு!

இல்லையேல்

அடக்கம் செய்வோம்

உன் பொய்திரிபை!

எரிகிறதா எம் தலைவர்

பணிகண்டு!

பொறுக்கவில்லையா - நம்

உயர்வுகண்டு!

வாலை நீட்டாதே

வாய்ச் சவடால் பேசாதே!

அடக்கிக் கொள்

வசமாக சிக்கிக் கொள்ளாதே!

வாய்க்கு வந்தபடி

எழுதாதே!

நிறுத்திக் கொள்!

எச்சரிக்கை!

வாழ்க வீரமணி!

வளர்க பெரியாரியம்!!

வெல்க திராவிடம்!!!

குறிப்பு: இப்பகுதியில் சுருக்க மாகப் பதிவிடுக!

No comments:

Post a Comment