'அய்யங்கார் குமுதம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

'அய்யங்கார் குமுதம்!'

ஒரு பிற்படுத்தப்பட்டவர் கையில் இருந்த ‘குமுதம்' ஓர் அய்யங்கார் கைக்கு வஞ்சகமாக மாறினாலும் மாறியது - அதன் விளைவு ஒவ்வொரு இதழிலும் மகாபெரியவாள்பற்றி ரீல் ரீலாக கப்சாக்களை அவிழ்த்துக் கொட்டுகிறது!

‘‘சொல்லாமலே குறைதீர்த்த காஞ்சி மகான்'' என்று ஒரு கதை - இந்த வாரத்தில்!

தன்னைத் தரிசிக்க வந்த ஒரு முதியவர் எதற்காக வந்திருக்கிறார் என்று ‘தூர திருஷ்டியால்' உணர்ந்து, தன்னிடம் கல்யாணப் பத்திரிகை வைக்க வந்த ஒரு ‘பசை'யானவரை அழைத்து,  ‘‘அதோ ஒருவர் நிற்கிறாரே, அவாள் என்னை நாடி வந்த அந்த உதவியைச் செய்துகொடு'' என்று சொல்ல, ‘ஆகட்டும் சாமி'ன்னு சொல்லி, ‘திருமணத்துக்குத் தேவையான கூறைப் புடவையை வாங்கிக் கொடுக்கிறோம்' என்று ஒப்புக் கொண்டாராம்!

‘‘என்ன, நீ கேட்கணும்னு நினைச்சது கிடைச்சிடுச்சா, இப்ப சந்தோஷமா? வீட்டுக்குப் போ'' என்று சொன்ன மகான், கை நிறைய குங்குமம் தந்து, ஆசீர் வதிக்க, பக்தனின் தேவையைச் சொல்லாமலே அறிந்து கொடுக்கும் தெய்வ மாகவே காட்சி தந்த மகானை கண் கலங்க வணங்கிவிட்டுப் புறப்பட்டார் அந்த முதியவர்.

இப்படி ஒரு ‘ரீலை' விட்டுள்ளது ‘குமுதம்!'

அது சரி, இவ்வளவு ஆன்மிக தொலைநோக்குச் சக்தியுள்ள அந்தப் பெரியவாளுக்குத் தனக்குப் பின் மடத்துக்கு வரும் சங்கராச்சாரியார்கள் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைபவர்களாக இருப்பார்கள் என்று தெரியாமல் போனது ஏன்?

பேஷ்! பேஷ்!! எத்தகைய  

‘தூர திருஷ்டி'  பெரியவாளுக்கு!


No comments:

Post a Comment