ராமநவமியின் ‘கிருபை?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

ராமநவமியின் ‘கிருபை?'

கோடா (ராஜஸ்தான்), ஏப். 3-  வட இந்தியாவில் ராமநவமி ஊர்வலம் என்ற பெயரில் கட்டுக்கடங்காமல் வன்முறைகள் அரங்கேறி வருகி றது. மதுபோதையில் ஊர்வலம் வரும் ஹிந்து அமைப்பினர் வழி யில் ஆண், பெண் என்று பாராமல் மோசமாக வசைபாடுகின்றனர். சிறுபான்மையினர் என்று தெரிந்துகொண்டால் அவர்களை அடித்துக் கொலை செய்வது வரை கொண்டாட்டம் என்ற பெயரில் செய்கின்றனர். 

 இந்த ஆண்டும் இதே போல் நிகழ்வு நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள கொத்ரா தீப்சிங் என்ற பகுதியில் ஊர்வலமாக சென்றவர் கள் உற்சாகத்தில் மேலே சென்ற மின்சார வயரைத்தொட்டுள்ளனர். உடனடியாக கூட்டத்தில் இருந்த வர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் 5 இளைஞர்கள் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 இதே போல் மேற்குவங்கத்தில் உள்ள ஜல்பாய்குடி என்ற பகுதி யில் விடுமுறைக்காக வந்த ராணுவ அதிகாரிகள் ராம நவமி கொண் டாட்டம் நடந்துகொண்டு இருக் கும் போது உற்சாகம் மிகுதியால் ஒருவரை ஒருவர் தூக்கி ஆடிய போது மின்சாரம் பாய்ந்து ராக் கேட் பிரிவு ராணுவ அதிகாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

அவரோடு ஆடிகொண்டு இருந்த 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அரியானா வில் ராமநவமி ஊர்வலத்தில் போது போதையில் கால்வாயில் விழுந்த நபரை யாரும் கண்டுகொள் ளதாதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

கொண்டாட்டம் முடிந்த பிறகு கால்வாயில் ராம்நவமி கொண்டாட்டத்தில் அணியும் சீருடையோடு உடல் ஒன்று இருப்பதைக் கண்ட பிறகுதான் நம்மோடு வந்த நபர் என்று அறிந்துகொண்டனர். 

ராமநவமி வன்முறை ஊர்வலத் தின் போது விபத்தில் சிக்கி இறப் பது தொடர்கதையாக உள்ளது. 2021ஆம் ஆண்டு ஆந்திரா மாநி லம் கர்னூலில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள் மேலே சென்ற மின்சாரவயரை பிடித்த தால் 3 பேர் வரை மரணமடைந்தனர். 

மத்தியப் பிரதேசத்திலும் ஊர்வலத்தின் போது ரயில்வே கேட்டைக் கடந்த ஊர்வலக் காரர்கள் வைத்திருந்த கத்தி மேலே சென்ற ரயில்வே மின்சார வயரைத் தொட்டதும் 3 பேர் மரணம டைந்தது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment